How to Buy Marriage Garland
பொதுவாக கல்யாணம் என்றாலே அதற்கு தேவையானதை பார்த்து பார்த்து வாங்குவோம். ஏனென்றால் வாழ்க்கையில் ஒருமுறை நடக்க கூடியது. அதனால் அதிலிருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வார்கள். அதில் ஒன்று தான் கல்யாண மாலை. இந்த மாலையை எல்லாரும் பார்த்து பார்த்து வாங்குவார்கள். ஏனென்றால் இதனை ட்ரெஸ் கலருக்கு மாலை வாங்குவார்கள். ஏனென்றால் அப்ப தான் போட்டோவிற்கு நல்லா இருக்கும் என்று நினைப்பார்கள். சில நபர்களுக்கு மாலை எப்படி வாங்குவது எப்படி தெரிவதில்லை. ஆகையால் இப்பதிவின் வாயிலாக கல்யாணத்துக்கு மாலை வாங்குவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
கல்யாணத்துக்கு மாலை வாங்குவது எப்படி.?
நீங்கள் மாலை வாங்கும் போது வெள்ளை, சிவப்பு, பச்சை போன்ற நிறங்களில் வாங்குவது சிறப்பான ஒன்றாக இருக்கிறது. வெள்ளை கலர் என்றால் சம்மங்கி பூ, மல்லிகை பூ உள்ளது போல வாங்கி கொள்ள வேண்டும். இந்த மாலையில் நடுவில் ரோஜா இதழ்கள் இருப்பது போல் வாங்கி கொள்ள வேண்டும்.
கவனிக்க வேண்டியவை:
நீங்கள் மாலையை ஆர்டர் கொடுப்பதற்கு முன் எந்த சீசனில் எந்த பூக்கள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் பணத்தை மிச்சம் செய்ய முடியும்.
நவம்பர் முதல் டிசம்பர் மாதத்தில் மல்லி பூ விலையானது அதிகமாக இருக்கும், அப்போது நீங்கள் இதனை வாங்கினீர்கள் என்றால் மாலை விலை அதிகமாக இருக்கும். ஏப்ரல் முதல் மே மாதத்தில் மல்லி பூ குறைவாக இருக்கும்.
வெயிட் இல்லாத மாலை வேண்டுமென்றால் ஜோதிகா மாலை, நயன்தாரா மாலை என்று கேட்டால் கொடுப்பார்கள். இந்த மாலைகள் வெயிட் இல்லாமலும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். மேலும் வெயிட்லெஸ் மாலைகளில் பல விதங்கள் உள்ளது. அதில் உங்களுக்கு எந்த மாதிரியான டிசைன் வேண்டுமோ அதனை சொன்னால் செய்து கொடுத்து விடுவார்கள்.
எந்த மாலை அழகாக இருக்கும்:
இந்த மாலை போட்டால் தான் போட்டோவிற்கு அழகாக இருக்கும் என்று கிடையாது. உங்களின் ட்ரெஸ் கலருக்கு Contrast ஆன மாலையை அணிவது சிறந்ததாக இருக்கும். இதில் என்ன அளவு கொடுப்பது என்ற சந்தேகம் இருக்கும். அதனால் 3 1/2 மாலை சொன்னால் சரியாக இருக்கும்.
நிச்சயதார்த்தம் மற்றும் ரிஷப்ஷன்:
நிச்சயதார்த்தம் மற்றும் ரிஷப்ஷன் போன்றவற்றிற்கு வெயிட் இல்லாத மாலையை தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால் இதற்கு ஆடைகள் எல்லாமே வெயிட் ஆக இருக்கும். ஆக நீங்கள் இதற்கு வெயிட் உள்ள மாலையை போட்டால் கழுத்து தொங்கி விடும். அதனால் வெயிட் இல்லாத மாலையை தேர்வு செய்வது சிறந்தது.
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Interesting information |