செவிலியர் கடமைகள்

Advertisement

செவிலியர் கடமைகள் 

இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படுவது இயல்பான ஒன்றாக இருக்கிறது. அப்படி உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும் போது மருத்துவமனையில் செல்வது இயல்பான ஒன்றாகும். அப்படி செல்லும் போது அங்கு மருத்துவரிடம் செல்லும் முன்னே நம்மை செவிலியர் தான் நம்மை கவனிக்கிறார்கள்.மருத்துவரிடம் சென்று வந்த பிறகும் சரி நாம் எப்போது மாத்திரை விழுங்க வேண்டும், நமக்கு ஊசி போடுவது போன்றவை செவிலியர் தான் செய்கிறார்கள். இவர்களின் வேலை என்பது ஊசி போடுவது, நோயாளி பார்த்து கொள்வது என்று நினைத்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அவர்களின் பொறுப்பு நிறைய இருக்கிறது. அதனை பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

செவிலியர் பொறுப்புகள்:

செவிலியர் காலை வேலைக்கு வந்தது முதல் வீட்டிற்கு செல்வது வரைக்கும் அவர்களின் கடமையை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

பொதுவாக மருத்துவமனையில் வேலை பார்ப்பவர்களுக்கு சிப்ட் படி வேலை இருக்கும். அதனால் காலை சிப்ட்டில் வேலைக்கு செல்கிறவர்கள் இரவு சிப்ட் வேலை பார்த்தவர்களிடம் ஹாண்ட் ஓவர் வாங்க வேண்டும்.

அதன் பிறகு மருத்துவமனையை சென்று பார்வையிட வேண்டும். அவர்களின் சிப்ட்டில் எல்லாமே சரியாக உள்ளதா என்று செக் செய்ய வேண்டும்.

செவிலியர் கடமைகள்:

பொதுவாக செவிலியர் ஒரு நோயாளி வருகிறவராக இருந்தாலும் சரி, அங்கையே இருப்பவர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு என்ன தேவையோ அதனை சரியாக செய்ய வேண்டும்.

அடுத்து அங்கு இருக்கும் பெட்டை சரியாக அமைக்க வேண்டும். ஒரு நோயாளி அந்த பெட்டை பயன்படுத்திய பிறகு அதனை அழகாக வைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு நோயாளி இருக்கிறார் என்றால் அவர்களின் மொத்த History-யும் அறிந்திருக்க வேண்டும்.

அவரை அடிக்கடி சென்று பார்வையிட வேண்டும். அவரின் உடல் நிலை எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை பார்வையிட வேண்டும்.

அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றால் அந்த நோயாளிக்கு தேவையானதை செய்வது, அறுவை சிகிச்சைக்கு தேவையானதை செய்வது போன்றவை இவர்களின் வேலையாக இருக்கிறது.

மருத்துவர் நோயாளியை பார்வையிடும் அறையில் அதற்கு தேவையான பொருட்கள் சரியாக உள்ளதா என்பதை பார்வையிட வேண்டும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement