உங்களை சிரிக்க வைக்க சில மொக்க கடிஜோக்ஸ் படித்து பாருங்க சிரிப்பை அடக்கவே முடியாது..!

Advertisement

Tamil Kadi Jokes Question and Answer

சிரிப்பு என்பது மனிதனோடு கூடப்பிறந்தது. இது ஓர் மனிதனின் பல விதமான சந்தர்ப்பங்களிலும் இயல்பாக வெளிப்படக்கூடிய ஒரு அருமையான நிகழ்வு. சிரிப்பு மனதையும், உடலையும் வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளார்கள். பொதுவாக நமது மனதில் ஏதாவது ஒரு மனக்குழப்பம் மற்றும் வருத்தம் உள்ளது என்றால் நம்மில் பலரும் பாடல் அல்லது ஜோக்கினை நாடுவோம்.

அப்படி நாம் பார்க்கும் அல்லது கேட்கும் ஜோக்ஸ்களால் உங்களின் மனதில் உள்ள குழப்பம் மற்றும் துன்பம் எளிதில் மறைந்து விடும். அப்படி உங்களின் மனதில் உள்ள மனக்குழப்பம் மற்றும் வருத்தம் ஆகியவற்றை மறந்து நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் சில மொக்க கடி ஜோக்ஸினை தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து வயிறு குலுங்க குலுங்க சிரிங்க..!

நீங்கள் வாய்விட்டு சிரிக்கிறதுக்கு சில கடி ஜோக்ஸ்

Jokes in Tamil with Answer

1. பிரியா, ஒரு உணவ சாப்பிடும் போது மட்டும் காதை மூடிட்டு சாப்பிடுவாளாம் ஏன்..?

விடை: ஏன்னா அது இடியாப்பம் ஆம்.

2. Circle-க்கும் Trinagle-க்கும் Test வச்சா யாரு Fail ஆவாங்க..?

விடை: Circle தான் ஏன்னா அதுக்கு தான் மூளையே இல்லயே.

3. தினேஷ்-க்கு கல்யாணமாம் ஆனா அவன மண்டபத்துக்கு கூட்டிட்டு போகாம சுடுகாட்டுக்கு கூட்டிட்டு போறங்கலாம் ஏன்..?

விடை: ஏன்னா அவன் தான் அடக்கமான பொண்ணு வேணும்னு கேட்டானாம்.

4. ஆகாஷ் அவனோட அப்பா பெயர எழுதி Fridge குள்ள வச்சிட்டானாம் ஏன்..?

விடை: ஏன்னா அவனோட அப்பாவோட பெயர போகாம பாத்துகுறானாம்.

5. ஒரு School-ல, Exam அன்னைக்கு எல்லாரும் கலர் ட்ரஸ் போட்டு போனாங்களாம் ஏன்..?

விடை: ஏன்னா அது Model Exam-ஆம்.

இந்த கடிஜோக்ஸ் படித்து பாருங்க சிரிப்பை நிறுத்த முடியாது

6. ரம்யா, நகை கடைல போய் மோதிரம் எடுத்து அதை கால்ல போட்டுக்கிட்டாளாம் ஏன்..?

விடை: ஏன்னா அது கால் பவுன் மோதிரமாம்.

7. Rahul Daily School-க்கு Slow வா தான் போரானாம் ஏன்..?

விடை: ஏன்னா அவன் போற வழியில School இருக்கு மெதுவா போங்கனு Board வச்சி இருக்குமாம்.

8. சூர்யா, காய்கறிக்கேல்லாம் கிச்சு கிச்சு முட்டிட்டு இருந்தானாம் ஏன்..?

விடை: ஏன்னா அவுங்க அப்பா தான் காய்கறிலாம் அழுகாம பாத்துக்க சொன்னாறாம்.

9. 100-க்கும்… 105-க்கும்… நடுவுல என்ன இருக்கு..?

விடை: 0 தான் இருக்கு.

10. நம்ம கணேஷ் இட்லிய வச்சே வீடு கட்டி இருக்கானாமே எப்படி..?

விடை: ஏன்னா அவன் பொண்டாட்டி சுடுற இட்லி கல்லு மாறி இருக்குமாம்.

வயிறு வலிக்கின்ற அளவுக்கு சிரிக்க இதை படியுங்கள்

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்
Advertisement