Marana Kadi Jokes in Tamil
பொதுவாக மற்ற உயிரினங்களில் இருந்து மனிதர்களை வித்தியாசப்படுத்துவது நமது சிரிப்பு தான். அப்படிப்பட்ட சிறப்புடைய நமது சிரிப்பினை நாம் ஒரு சில நேரங்களில் நமது மனவருத்தத்தின் காரணமாக தொலைத்துவிடுவோம். அப்பொழுதெல்லாம் நமது மனதின் வருத்தத்தை போக்கி அதனை நம்மை நாமே மகிழ்ச்சிப்படுத்த வகையான முயற்சிகளை மேற்கொள்வோம் அதாவது பாடல் கேட்பது அல்லது ஜோக்கினை கேட்போம் அல்லது பார்ப்போம்.
அப்படி நமது மனதில் உள்ள வருத்தத்தை போக்க நாம் கேட்கும் ஜோக்ஸ்களினால் நமது மனதில் உள்ள துன்பம் எளிதில் மறைந்து விடும். அப்படி உங்களின் மனதில் உள்ள அனைத்து கவலைகளையும் மறந்து வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிக்க வைக்கும் சில கடி ஜோக்ஸ்களை இந்த பதிவில் பதிவிட்டுளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து உங்கள் மனதில் உள்ள அனைத்து கவலைகளையும் மறந்து சிரியுங்கள்..!
வயிறு குலுங்க குலுங்க சிரிக்க கடி ஜோக்ஸ்
Kadi Jokes in Tamil with Answers
- டன் கணக்கில் துணி துவைக்கும் இடம் எது.?
விடை: Washing(Ton) தான்.
2. ரொம்ப Costly ஆன கிழமை எது.?
விடை: வெள்ளி கிழமை தான்.
3. ஒருத்தன் தலையில இருந்து “இலை” யா கொடுச்சாம் ஏன்.?
விடை: ஏன்னா அவன் மரமண்டயாம்.
4. எல்லா பிரியாணிக்கும் டெஸ்ட் வச்சா எந்த பிரியாணி Fail ஆகிடும்.?
விடை: முட்டை பிரியாணி தான்.
5. கோவிலுக்கும், சாமிக்கும் அப்படி என்ன வித்தியாசம்.?
விடை: கோவில் சிம்பு நடிச்ச படம்! சாமி விக்ரம் நடிச்ச படம்.
மனக்கவலை அனைத்தையும் மறந்து சிரிக்க உதவும் சில கடிஜோக்ஸ்
6. ஆப்பிள் நரிக்கி வச்சா என்ன ஆகும்.?
விடை: நரி சாப்பிட்டு போயிடும்.
7. அமெரிக்காவில் பிறந்த குழந்தையோட பல்லு என்ன கலர்ல இருக்கும்.?
விடை: அட பிறந்த குழந்தைக்கு தான் பல்லே இருக்காதே.
8. சாப்பிட முடியாத கனி எது.?
விடை: பால்கனி தான்.
9. எந்த ஊருல அதிஷ்டமே இருக்காது.?
விடை: Luck no(Lucknow) தான்.
10. தினேஷ் எப்போதும் Chair-லயே உட்கார்ந்துக்கிட்டே இருப்பானாம் ஏன்.?
விடை: ஏன்னா அவன் (Chair)man ஆம்.
உங்களின் கவலைகளை மறந்து சிரிக்க சில ஜோக்ஸ்
இந்த கடிஜோக்ஸை ஒரே ஒரு முறை படித்து பாருங்கஉங்களால் சிரிப்பை நிறுத்தவே முடியாது
மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | கடி ஜோக்ஸ் |