வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சாப்பிட்ட பிறகும் பசிக்குதா இந்த நோயின் அறிகுறிகளாக கூட இருக்கலாம் ..!

Updated On: May 7, 2024 7:04 PM
Follow Us:
pasi edupadhan karanam.
---Advertisement---
Advertisement

Sapita Piragum Pasithal Enna In Tamil

பசி என்பது எல்லா உயிர்களுக்கும் உள்ள பொதுவான உணர்வு. இந்த பசி உணர்வு நமக்கு உடலில் சத்துக்கள் தேவை என்பதை குறிப்பதாகும். பசி எடுத்து சாப்பிடுவது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையே தருகின்றது. ஆனால் சிலருக்கு பசியே எடுப்பதில்லை அது உடலுக்கு நல்லதல்ல. அதே போல் நன்றாக சாப்பிட்ட பின்னும் பசி எடுக்கின்றது என்றால் அது உடலுக்கு நல்லதல்ல. அது சில நோய்களுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகளாக கூட இருக்கலாம். அப்படி நன்றாக சாப்பிட்ட பிறகும் பசித்தால் இந்த நோய்களின் அறிகுறிகளாக இருக்கலாம் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளுங்கள்.

நீரிழப்பு :

pasi

சிலருக்கு தண்ணீர் தாக உணர்வுக்கும் பசி உணர்வுக்கும் வித்தியாசம் தெரியாமல் தாகம் எடுக்கும்போது பசி உணர்வு என தவறாக புரிந்து கொண்டு சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். இது முற்றிலும் தவறு. உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் சத்து கிடைக்காவிடில் நீரிழப்பு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இது பசி உணர்வு போன்றே இருக்கும். அதனால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதனை அறிந்து செயல்படுங்கள்.

தூக்கமின்மையால் பசி  ஏற்படலாம் :

நீங்கள் போதிய அளவு தூங்கவில்லை என்றால் உடலில் பசிக்கான கிரேலின் மற்றும் லெப்டின் ஆகிய ஹார்மோன்கள் பாதிப்படையும். இதனால் கிரேலின் ஹார்மோன் பசியை தூண்ட கூடிய ஹார்மோனாகவும். லெப்டின் சாப்பிட்ட திருப்தியை கொடுக்கும் ஹார்மோன். சரியாக துங்கவில்லை என்றால் பசியை அதிகரிக்கும் கிரேலின் ஹார்மோன் உடலில் அதிகரித்து விடும். இதனால் நீங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் சாப்பிட்ட உணர்வு இருக்காது. அதனால் சரியான தூக்கம் அவசியம்.

சத்து குறைபாடு :

நன்றாக சாப்பிட்ட பின்பும் பசி எடுப்பதற்கு காரணம் சாப்பிடும் உணவில் ஊட்ட சத்துக்கள் இல்லையென்றாலும், உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காததால் பசி உணர்வு அதிகமாகும். இதனால் மைக்ரோநியூட்ரியன்ட்கள் நிறைந்த அதாவது புரத சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்.

உடலில் நார்ச்சத்து இல்லாமை :

உடலில் நார்ச்சத்து குறைந்தால் என்ன தான்  சாப்பிட்டாலும் சாப்பிட்ட உணர்வு கிடைக்காது. அதனால் அதிக பசி எடுக்கும். இதனை தடுக்க நார்ச்சத்துக்கள் நிறைந்த பழங்கள் காய்கறிகளை சாப்பிடலாம். இதனால் உடலில் நார்ச்சத்துக்கள் அதிகரித்து பசிநிலை உடலில் சமநிலைக்கு வந்துவிடும்.

பசிக்கும் போது ஏன் வயிறு கத்துகிறது தெரியுமா..?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil

 

Advertisement

Indhu Mathi

நான் இந்துமதி பொதுநலம் வலைத்தளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். ஆரோக்கியம் ,அழகு குறிப்பு மற்றும் சமையல் குறிப்பு போன்றவற்றின் தகவல்களை உங்களுக்கு சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now