வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மதுரை முத்து கடி ஜோக் – Madurai Muthu Kadi Jokes in Tamil

Updated On: December 10, 2025 4:27 PM
Follow Us:
Madurai Muthu Kadi Jokes in Tamil
---Advertisement---
Advertisement

Madurai Muthu Kadi Jokes in Tamil

மதுரை முத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மேடை, தொலைக்காட்சி சிரிப்புரையாளர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவர் கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு, காமெடி ஜங்சன் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஊடாக பரந்து அறியப்பெற்றார். பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும், இவர் இருந்துள்ளார்.

இந்த பதிவில் நாம் நம் நபர்களிடம் காமெடி சொல்லி மகிழ மதுரை முத்துவின் கடி ஜோக்ஸ் பார்க்க உள்ளோம். மதுரை முத்து முதன் முதலில் கலக்க போவது யாரு? என்ற முதல் தனது அசாதாரண திறமையில் நிகழ்ச்சியில் வென்றார். பின்னர், அசத்த போவது யாரு? என்ற நிகழ்ச்சியிலும் வென்றார்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கடி ஜோக்ஸ் கேள்வி மற்றும் பதிலுடன்..

மதுரை முத்து கடி ஜோக் – Madurai Muthu’s Kadi jokes:

1 ஒரு பையன் தலைக்கு அடியில் Dictionary வெச்சிட்டு தூக்குறானாம். ஏன்?
ஏனா, அவனுக்கு அர்த்தமில்லாத கனவு வருதாம்.

2 கிணத்துல கல்லை போட்டால் ஏன் முழுகிறது?
ஏன்னா, கல்லுக்கு நீச்சல் தெரியாதாம்.

3 ஒருத்தவங்க Sugar டப்பாவில், Saltனு எழுதி வெச்சாங்க ஏன்?
எல்லா எருமையும் ஏமாத்த.

4 ஒருத்தர் அவருடைய பையன மண் எண்ணெயை ஒற்றி குளிப்பாட்டினாராம். அது என்ன?
ஏன்னா அவருடைய பையன் துறுதுறுனு இருப்பாராம்.

5 ஒருத்தர் எப்பவும் கட்டையோடு சுற்றிக்கொண்டு இருந்தாராம். என்?
ஏன்னா அவரு கட்ட பிரமச்சாரி.

6 ஒருத்தன் கடையில ஊசி வாங்கினான். அது வெடிச்சிடுச்சி. ஏன்?
ஏன்னா, அவன் வாங்கியது குண்டு ஊசியாம்.

7 ஒரு Inspector தேங்காய் எடுத்துக்கிட்டு கைதியை பார்க்க போனாராம்… ஏன்?
துருவி துருவி கேள்வி கேட்க தான்.

8 எந்த ஊருக்கு Award கொடுத்து இருக்காங்க?
விருது(Award) நகர்.

9 ஒருத்தர் எப்பவும் மத்தவங்க கையை தான் எதிர் பார்த்து இருப்பாரு. ஏன்?
ஏன்னா அவரு கை ரேகை ஜோசியராம்.

10 ஒரு பையன் கோவிலுக்கு போன அதிகம் பொய் பேசுகிறான். என்?
ஏன்னா, கோவிலுக்கு போனதும் மெய் மறந்து பொய்ட்டானாம்.

11 ஒருத்தனை ஒரு கொசு கடிச்சுச்சாம் ஆன அந்த கொசுவை அவன் கடிக்காம விட்டுட்டானாம் ஏன்?
ஏன்னா அந்த கொசுல அவனோட இரத்தம் இருக்குல்ல.

12 ஒரு பறவை எழுதி கொண்டே இருக்கும் அது என்ன பறவை?
பென்குயின். ஏன்னா அதுல பென் இருக்குல.

13. கீழே விழுந்தாலும் காயம் படாமல் இருப்பது எது?

மழை

14. எந்த வில்லை நாம கட்ட முடியாது ?

வானவில்

15.கால்கள் இல்லாத ஆட்டின் பெயர் என்ன ?

ஆட்டு இறைச்சி

16. மரம் செடி இல்லாத கார்டு எது ?

சிம் கார்டு

17.பல் வலிக்க முக்கிய காரணம் எது?

பற்கள் தான்

18. அதிக வெய்ட் தூக்குற பூச்சி எது?

மூட்டை பூச்சி

19.குடிக்க முடியாத டீ எது?

கரண்டி

20. எந்த பூச்சியை தொட்டால் சாக் அடிக்கும்?

மின் மினி பூச்சி

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பழைய ஜோக் தங்கதுரை ஜோக்ஸ்

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now