வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நீங்கள் நினைத்து நினைத்து சிரிக்க கடிஜோக்ஸ்..!

Updated On: January 25, 2024 5:57 PM
Follow Us:
Comedy Kadi Jokes in Tamil
---Advertisement---
Advertisement

Comedy Kadi Jokes in Tamil

சிரிப்பு என்பது மனிதனோடு கூடப்பிறந்தது. இது ஓர் மனிதனின் பல விதமான சந்தர்ப்பங்களிலும் இயல்பாக வெளிப்படக்கூடிய ஒரு அருமையான நிகழ்வு. சிரிப்பு மனதையும், உடலையும் வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளார்கள். பொதுவாக நமது மனதில் ஏதாவது ஒரு மனக்குழப்பம் மற்றும் வருத்தம் உள்ளது என்றால் நம்மில் பலரும் பாடல் அல்லது ஜோக்கினை நாடுவோம்.

அப்படி நாம் பார்க்கும் அல்லது கேட்கும் ஜோக்ஸ்களால் உங்களின் மனதில் உள்ள குழப்பம் மற்றும் துன்பம் எளிதில் மறைந்து விடும். அப்படி உங்களின் மனதில் உள்ள மனக்குழப்பம் மற்றும் வருத்தம் ஆகியவற்றை மறந்து நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் சில மொக்க கடி ஜோக்ஸினை தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து வயிறு குலுங்க குலுங்க சிரிங்க..!

இந்த கடிஜோக்ஸை படிச்சீங்கனா உங்களால் சிரிப்பை கட்டுப்படுத்தவை முடியாது

Mokka Jokes Questions and Answers in Tamil

1. Lavanya Maths Exam-ல மட்டும் Zero மார்க் எடுப்பாளாம் ஏன்.?

விடை: ஏன்னா அவுங்க Teacher Zero-கு தான் Value அதிகம்னு சொன்னாராம்.

2. Shinchan அவன் நாய் காதுல பால் ஊத்திட்டானாம் ஏன்.?

விடை: அதுதான் வாய் இல்லாத ஜீவன் ஆச்சே அதன் காது வழிய சாப்பாடு கொடுக்குறானாம்.

3. Rahul தினமும் ஹோட்டல Parcel வாங்கிட்டு வந்து சாப்பிடுவானாம் ஏன்.?

விடை: Doctor அவன் கிட்ட ஹோட்டல சாப்பிட கூடாதுனு சொன்னாராம் அதான்.

4. ஒருத்தன் டாக்டர பாக்க Cylinder எடுத்துட்டு போனானாம் ஏன்..?

விடை: அவனுக்கு Gas Trouble-ஆம்.

5. ஒரு கல்யாணத்துக்கு வந்த எல்லாரும் கையில Bread எடுத்துட்டு வந்தாங்கலாம் ஏன்.?

விடை: அந்த கல்யாணம் ஜாம் ஜாம்-னு நடந்துச்சாம்.

உங்களை சிரிக்க வைக்க சில மொக்க கடிஜோக்ஸ் படித்து பாருங்க சிரிப்பை அடக்கவே முடியாது

6. ஒருத்தர் அவரு பொண்டாட்டி முகத்துல எப்போ பார்த்தாலும் தண்ணி தெளிச்சிட்டே இருப்பாராம்..?

விடை: அவர் மாமனார் ஏன் பொண்ண பூ மாதிரி பாத்துக்கோங்கனு சொன்னாராம்.

7. Akash Highway-ல உக்காந்து Exam-க்கு படிக்கிறானாம் ஏன்.?

விடை: ஏன்னா அவன் Public Exam-கு படிக்கிறானாம்.

8. சாப்பிட முடியாத கனி எது.?

விடை: பால்கனி தான்.

9. டாக்டர் ஊசி போட வரும் போது ஒருத்தன் தடுத்தானாம் ஏன்.?

விடை : ஏன்னா, அது தடுப்பூசியாம்..!

10. ஒருத்தன் திடீர்னு பசிக்குதுனு Mobile-ல கடிச்சி சாப்பிட் டானாம் ஏன்.?

விடை : ஏன்னா அது Appel Mobile-லாம்

நீங்கள் வாய்விட்டு சிரிக்கிறதுக்கு சில கடி ஜோக்ஸ்

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now