தங்கதுரை ஜோக் – Thangadurai Jokes in Tamil With Answers

Advertisement

பழைய ஜோக் தங்கதுரை ஜோக்ஸ் – Thangadurai Jokes in Tamil

நகைச்சுவை என்பது மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. சில நகைச்சுவைகளை கேட்கும் போது அந்த நேரத்தில் மகிழ்ச்சியாக இருக்கலாம். தங்கதுரை தமிழ்நாட்டின் பிரபலமான நகைச்சுவை நடிகர். அவர் பழைய ஜோக்குகளில் ஸ்பெஷலிஸ்.

இவர் சன் டிவியில் அசத்தப் போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலமாக அறிமுகமான தங்கதுரை தற்போது கடி ஜோக்ஸ்க்கு பெருமையானவர். அவரது இன்றைய பயணம் மொக்க ஜோக்ஸ், கடி ஜோக்ஸ், செத்த ஜோக்ஸ் என்று தொடர்கிறது. கடி ஜோக்ஸ் என்றால் எல்லோரது நினைவுக்கு வருபவர் துரை தான். அந்த அளவுக்கு கடி ஜோக்ஸ் சொல்லி நம்ம மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். கடி ஜோக்ஸ், மொக்க ஜோக்ஸ், செத்த ஜோக்ஸ் எல்லாம் அவர் கூறும் திறன்பெற்றவர்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கடி ஜோக்ஸ் கேள்வி மற்றும் பதிலுடன்..

Thangadurai Tharkolai Jokes in Tamil:

1 எல்லா பிரியாணிக்கும் Test வெச்ச எந்த பிரியாணி Fail ஆகும்?

விடை: முட்டை பிரியாணி

2 அதிக Weight தூக்குற பூச்சி எது?

விடை: மூட்டை பூச்சி

3 எல்லா SEA – லையும் குளிக்க முடியும் ஆனால் ஒரு SEA- ல குளிக்க முடியாது அது என்ன Sea

விடை: மிக்சி

4 உலகத்திலேயே முதல் முறையாக எங்கே கண் ஆப்ரேஷன் நடந்துச்சு?

விடை: கண்ணுல தான்

5 பசுமாடு ஏன் பால் கொடுக்குதுனு தெரியுமா?

விடை: ஏன்னா காபி, டீ கொடுக்க முடியாதுல அதனால

6 மைக்கேல் ஜாக்சன் ஆடுவார் பாடுவார் ஆனா உக்கார சொன்னா உக்கார மாட்டார்?

விடை: ஏன்னா அவருக்கு தமிழ் தெரியாதுல

7 ஒருத்தனுக்கு செம்ம பசியாம் ஸ்ட்ரைட்டா போயிட்டு மழையில நனைந்த உடனே பசி போயிடுச்சாம் என்?

விடை: ஏன்னா அது அடை மழையாம்

8 புறா அணில் இரண்டில் எதுக்கு கிட்ட Letter கொடுத்த அது சரியான Address க்கு பொய் சேரும்

விடை: அணில் தான் ஏனா அது கிட்ட தான் Pin code இருக்கு.

9 ஒருத்தவங்க சூப்பரா சமைப்பாங்க ஆனா ஒரு காரம் பண்ணா மட்டும் சாப்பிட முடியாது என்?

விடை: ஏன்னா அது நமஸ்காரம்

10 ஒரு பாட்டு போட்டு ஆட முடியாது அது என்ன பாட்டு?

விடை: நிப்பாட்டு

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கணவன் மனைவி கடி ஜோக்ஸ்

11 தண்ணீரை தண்ணினு சொல்லமுடியும்
பண்ணீரை பண்ணினு சொல்ல முடியுமா?

12 என்னதான் ஊரில் வெள்ளம் வந்தாலும்
அந்த வெள்ளத்தில் சக்கரைப்பொங்கல்
பண்ண முடியுமா?

13 கிரிக்கெட் Match பார்த்துக்கிட்டு ஒரு கொசு தீடிர்னு செத்து போச்சாம் ஏன்?

விடை: ஏன்னா இந்தியா ALL OUT ஆயிடிச்சாம்.

14 Eyeline=க்கும் லிப்ஸ்டிக்கும் சண்டை வந்துச்சா யாரு பெரியவங்கன்னு லிப்ஸ்டிக் ஜெயிச்சதாம் ஏன்?

விடை: ஏன்னா வாய்மையே வெல்லும்

15 என்னதான் நாய்க்கு நாலு கால் இருந்தாலும் அதால கால் மேல கால் போட்டு உட்கார முடியாது.

16 உங்க ஊர்ல பொங்கலுக்கு லீவு விடுவாங்க இட்லிக்கு லீவு விடுவாங்களா?

17 அண்ணன் : ரூமை மூடிகிட்டு ஏன் மருந்து சாப்பிடர?
தம்பி : டாக்டர் தான் ‘அறை’மூடி மருந்து சாப்பிட சொன்னார்.

18 உலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது?
தெரியல…..
பல் டாக்டருக்கு தான்.
எப்படி?
அவர் தான் எல்லோர் “சொத்தை”யும் பிடுங்கராறே.

19 குக்கர்ல சமைத்து சாப்பிட்டா குண்டாயிடுவோம். எப்படி?
அது மேல தான் “Weight” போடரோம் இல்ல?

20 யோவ் ராப்பிச்சை உன் பையனை எதுக்கு இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல சேர்த்தே ?
அவனாவது ஃபாரின்ல போய் பிச்சை எடுக்கட்டும்னு தான்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கடி ஜோக்ஸ் விடுகதை மூலம் உங்களுக்காக..

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்
Advertisement