கடி ஜோக்ஸ் விடுகதை மூலம் உங்களுக்காக..!

Advertisement

Kadi Jokes Vidukathai in Tamil

இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் அடுத்த நொடி என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. இந்த வாழ்க்கைக்குள் ஆயிரம் போராட்டம். ஒவ்வொரு நாளையும் கடப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. குடும்பத்தில் உள்ள பிரச்சனை, வேலையில் உள்ள பிரச்சனை என்று எப்பொழுதும் மன அழுத்தத்திலே இருப்போம். வீட்டிற்கு வந்தால் வீட்டில் உள்ளவர்களிடம் பேசாமல் மொபைலை தான் பார்ப்போம். அதனால் தான் நீங்கள் மொபைலில் பார்த்து உங்களின் மன அழுத்தத்தில் இருந்து சிரிப்பதற்கு சில விடுகதை ஜோக்ஸை பதிவிட்டுள்ளோம். அதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

விடுகதையில் ஜோக்ஸ்:

  1. எந்த மாதத்தில் மக்கள் குறைவாக தூங்குவார்கள்?

விடை: பிப்ரவரி

2. ஒருத்தன் தேர்வறைக்கு சென்றுவிட்டு திரும்பிட்டான் ஏன்?

விடை: அது ரிட்டன் எக்ஸாம்

3. எல்லா பெட்டியிலும் துணி வைக்கலாம், இதில் வைக்க முடியாது

விடை: தீப்பெட்டி

4. கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன

விடை: உப்பு

5. தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?

விடை: முதுகு

6. உங்க பேனாவை வெச்சி எல்லா எழுத்தையும் எழுதலாம் ஆனா ஒரு எழுத்தை எழுத முடியாது? அது என்ன எழுத்து சொல்லுங்க பார்ப்போம்

விடை: வேற என்ன தலை எழுத்து தான்

7. இந்த உலகத்திலே பல் டாக்டர்க்கு தான் அதிகம் சொத்து இருக்கும் ஏன்

விடை: என்னா அவர்தானே அதிக சொத்தை புடுங்குறாரு

8. கடிகாரம் வாங்க ஒருத்தன் கடைக்கு போன அப்போ அந்த கடைக்காரரு கிட்ட எந்த கடிகாரம் சரியா Time காட்டும்னு கேட்டானாம். அதுக்கு அந்த கடைக்காரரு என்ன சொல்லி இருப்பாரு தெரியுமா

விடை: தம்பி! எந்த கடிகாரமும் நேரத்தை காட்டாது நம்மதான் பார்த்துக்கணும்

9. தாஜ்மஹாலுக்கு பெயிண்ட் அடிச்சா என்ன ஆகும்

விடை: செலவாகும்

10. ஒருத்தர் அவரோட Driving licenseஆ குழி தோண்டி புதைச்சிட்டாராம். ஏன்

விடை: ஏன்னா அது Expiry ஆகிடுச்சாம்

11. ஒருத்தன் சாப்டறதுக்கு முன்னாடி Fanஆ off பண்ணிட்டு சாப்பிட்டான் ஏன்

விடை: ஏன அவரோட அப்பா வியர்வை சிந்தி சாப்பிட சொன்னாராம்

12. மரம், செடி இல்லாத காடு எது?

விடை: சிம்கார்டு

13. எல்லா கிளியும் பறக்கும், ஆனால் ஒரு கிளி மட்டும் பறக்காது அது என்ன கிளி?

விடை: சங்கிலி

14. தமிழ் நியூ இயர்”-க்கும், “இங்கிலிஷ் நியூ இயர்”-க்கும் என்ன வித்தியாசம்

விடை: 4 மாசம் தான் வித்தியாசம்

15. இந்தியா, பாகிஸ்தான் இரண்டுக்கும் நடுவுல என்ன இருக்கு?

விடை:  கமா “,” தான் இருக்கு

இந்த கடிஜோக்ஸை ஒரே ஒரு முறை படித்து பாருங்கஉங்களால் சிரிப்பை நிறுத்தவே முடியாது

கவலைகளை மறந்து சிரிக்க இதை மட்டும் ஒரு முறை படியுங்கள்

உங்களின் கவலைகளை மறந்து சிரிக்க சில ஜோக்ஸ்

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்

 

Advertisement