மொக்க ஜோக்ஸ்
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் உங்களை சிரிக்க வைப்பதற்கு சில ஜோக்ஸை பார்ப்போம். தினமும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருப்பவர்களும், மன உளைச்சலில் இருக்கும் போதெல்லாம் இந்த பதிவை படித்து பாருங்கள். உங்களை மறந்து சிரிப்பீர்கள். நீங்களே சிரிக்க வேண்டாம் என்று நினைத்தாலும் சிரிப்பை அடக்க முடியாது. வாங்க மொக்க ஜோக்ஸை படித்து தெரிந்துகொள்வோம்.
Mokka Jokes in Tamil with Answers:
- சார் ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்.?
விடை: நோயோட தான்
2. காதலிக்கிறங்கவுங்க ஏன் எப்ப பார்த்தாலும் பொய்யே பேசுறாங்க.?
விடை: ஏன்னா அவங்க தான் மெய் மறந்து காதலிக்கிறாங்களே.
3. எங்க அம்மா சர்க்கரை டப்பால உப்பு னு எழுதி வெச்சாங்க ஏன்?
விடை: எல்லா எறும்பையும் ஏமாத்துறதுக்கு
4. ஒரு போலீஸ் தேங்காயை ஒடச்சி ஸ்டேஷன் க்கு எடுத்துகுடு பொன்ராம் ஏன் ?
விடை: பொய் கைதியை துருவி துருவி கேள்வி கேக்க
5. எந்த ஆத்துல மீன் பிடிக்க முடியாது.?
விடை: ஐயர் ஆத்துல
6. எந்த எழுத்தை எழுத முடியாது.?
விடை: தலையெழுத்து
7. எந்த கடிகாரம் correct time காட்டும்.?
விடை: எந்த கடிகாரமும் காட்டாது நம்ம தான் பார்க்கணும்.
8. கடற்கரையில வீடு கட்டுனா என்ன ஆகும்.?
விடை: காசு செலவாகிடும்.
9. கதவு மூடிட்டு தான் மருந்து குடிக்கணுமாம் ஏன்.?
விடை: doctor மருந்து அறை மூடி குடிக்கணும்னு சொன்னாராம்.
10. ஒருத்தன் speed அபைக் ஓட்டிட்டு போனான் தீடிர்னு பைக் நிறுத்திட்டினாம் ஏன்.?
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அனைவரையும் சிரிக்க வைக்கும் 90-ஸ் கிட்ஸ் ஜோக்ஸ்
விடை: ஏன்னா அவன் வீடு வந்துருச்சா.
11. தலைவலிக்கு முக்கிய காரணம் என்ன.?
விடை: தலை தான் தாங்க
12. எலுமிச்சைப்பழம் ஏன் மஞ்சள் நிறமாக இருக்கு.?
விடை: ஏன்னா அது பல் வழக்கல
13. எந்த காட்டிலும் கிடைக்காத பூச்சி என்ன பூச்சி.?
விடை: கண்ணாமூச்சி
14. டாக்டர் ஊசி போட வரும் போது ஒருத்தன் தடுத்தான் ஏன்.?
விடை: அது தடுப்பூசி
15. ஒருவர் 15 மணி நேரம் chair – லே இருந்தாராம் ஏன்.?
விடை: ஏன்னா அவர் Chairman
16. ஒரு பச்சை கல்லை கடலில் எறிந்தால் அது என்னவாகும்.?
விடை: ஈரமாகும்
17. மரம், செடி இல்லாத காடு எது.?
விடை: சிம்கார்டு
18. கல்யாண வீட்டில் ஏன் வாழை மரம் கட்றாங்க.?
விடை: கட்டலானா கீழே விழுந்துடும்
19. கோலம் போடுவதற்கு முன்னடி எதுக்கு தண்ணீர் தெளிக்கணும்.?
விடை: கோலம் போட்டதுக்கு அப்புறம் தெளிச்ச கோலம் அழிஞ்சுடும்.
20. ஒருத்தன் தினமும் இரவில் தலைக்கு அடில dictionary book வெச்சு தூங்குறானாம் ஏன் ?
விடை: ஏன்னா அவனுக்கு தினமும் நைட் அர்த்தமில்லாத கனவு வருதாம்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |