Purananuru Veru Peyargal in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் புறநானூறு வேறு பெயர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். எட்டுத்தொகை நூல்களில் ஒன்று புறநானூறு. இன்று வரை இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை. இந்நூலில் உள்ள பாடல்கள் அனைத்தும் பல்வேறு காலத்தில் பல்வேறு புலவர்களால் தொகுக்கப்பட்டது. புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன. இதனை ஜி. யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
இப்படி புறநானூறு பாடல்கள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அவற்றில் நாம் அடிப்டையாக தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது (Purananuru Veru Peyargal) புறநானூறு வேறு பெயர்கள். எனவே, அவற்றை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம்.
புறநானூற்றின் வேறு பெயர்கள்:
- புறம்
- புறம்பாட்டு
- புறம்பு நானூறு
- தமிழர் வரலாற்று பெட்டகம்
- தமிழர் களஞ்சியம்
- திருக்குறளின் முன்னோடி
- தமிழ்க் கருவூலம்
மேற்கூறிய பெயர்கள் அனைத்தும் புறநானூற்றின் வேறு பெயர்கள் ஆகும்.
புறநானூற்றின் மூலம் என்ன அறியலாம்.?
புறநானூற்றின் மூலம் அக்காலத் தமிழ் மக்களின் அரசியல், சமூகம், பொருளாதாரம், கல்வி, நாகரிகம், கலை வளர்ச்சி, வீரம், கொடை, ஆடை, அணிகலன், பழக்க வழக்கங்கள், வாணிபம் போன்ற பல செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.
புறநானூறானது அக்கால சமூக நிலையை காட்டும் ஓர் கண்ணாடியாகவே காணப்படுகின்றது. அதாவது பெண்கள் மங்கல அணி அணிதல், நடுகல் தட்டல், கணவனை இழந்த பெண்கள் கைம்பை நோன்பு நோற்றல், உடன் கட்டையேறுதல், முறத்தால் புலியை விரட்டும் மகளிர் என பெண்களின் வீரத்தை எடுத்தியம்புவதோடு சங்ககால சமூக நிலையினையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. பாண்டியன் நெடுஞ்செழியன் முதலான 15 பாண்டிய மன்னர்களையும் கரிகாற்சோழன் போன்ற 18 சோழ அரசர்களையும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் போன்ற 18 சேர அரசர்களையும் சிறப்பித்துப் பாடியுள்ளனர்.
தொகுத்தவர் தொகுப்பித்தவர் வித்தியாசம்
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |