மாணவர்களுக்கான மொக்க ஜோக்ஸ்

Advertisement

Funny Jokes in Tamil For Students

வீட்டில் இருக்கும் டென்சன் மற்றும் வேலையில் இருக்கும் டென்சன் காரணமாக பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகுகிறார்கள். மன அழுத்தத்திலிருந்து வெளியே வராமல் அப்படியே இருந்தால் நம்முடைய உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். மற்றவர்களுடன் மனம் விட்டு பேசினாலே மன அழுத்தம் குறையும். ஆனால் இதனை யாரும் செய்வதில்லை. ஏனென்றால் அதிக மொபைலுடன் தான் நேரத்தை செலவிடுகிறார்கள். இதில் வீடியோக்களை பார்த்து விட்டு தங்களின் மனநிலையை மாற்றி கொள்கிறார்கள். அதனால் தான் இந்த பதிவில் காமெடியான ஜோக்ஸ்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

Short Funny Jokes in Tamil For Students:

1. ஆசிரியர் : டேய் தம்பி நீ வீட்டு பாடம் செஞ்சிடியா?

மாணவன் : சார் நா ஹாஸ்டல் ஸ்டுடென்ட் அதான் பன்னல.

2. கணக்கு ஆசிரியர் : அறிவ பெருக்குங்கடா அப்ப தான் வாழ்க்கைல முன்னுக்கு வர முடியும்.

மாணவன்:  சார் அறிவ பெருக்க சொல்றீங்க அத எத்தனையால பெருக்கனுனு சொல்லவே மாட்றீங்களே

3. ஆசிரியர் – ராமாயணத்தில் வில்லை உடைத்து யார்?

மாணவன் – அழுகிறான்

ஆசிரியர் – ஏன்டா அழுவுற நா பாடத்துல இருந்து தான கேள்வி கேக்குறேன்.

மாணவன் – சார் சத்தியமா நா இல்ல சார்.

4. ஆசிரியர்: நான் தினமும் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று படித்து வந்தேன்…

மாணவன்: அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமா சார்…

5. ஆசிரியர் : நீ இந்த பரீட்சையில 90 மார்க் வாங்கனும்

மாணவன் : 100 மார்க் வாங்குவேன் சார்.

ஆசிரியர் : டேய் காமெடி பண்ணாதடா.

மாணவன் : யார் சார் முதல்ல காமெடி பண்ணது.

இந்த கடிஜோக்ஸ் படித்து பாருங்க சிரிப்பை நிறுத்த முடியாது

6. ஆசிரியர்: ஒரு புவியியல் ஆசிரியர் வகுப்பில் ஒரு மாணவனை பார்த்து பூமி எத்தனை டிகிரி சாய்வக சுற்றுகிறது என கேட்டார்

மாணவன்: அதற்கு அந்த மாணவன் ”டிகிரி படித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?” என்றான்

7. ஆசிரியர்: நீ எதுவரைக்கும் படிக்க ஆசைப்படுற ?

மாணவன்: ஸ்கூல் பெல் அடிக்கர வரைக்கும் சார்

8. ஆசிரியர்: எது கேட்டாலும் தெரியாதுன்னு சொல்ற ஒரு பையன் நேற்று ஒரு கேள்விக்கு சரியாகப் பதில் சொல்லி விட்டான்…

மாணவன்: என்ன கேட்டீங்க…?

ஆசிரியர்: ஆந்தைக்கு பகல்ல கண் தெரியுமான்னு கேட்டேன். தெரியாது…ன்னுட்டான்.

9. ஆசிரியர்: காந்தி ஜெயந்தி பற்றி கட்டுரை எழுதுக‌.

மாணவன்: காந்தி தெரியும் அது யாரு ஜெயந்தி?

10. மாணவன் சுபாஷ்: நம்ம ஆசிரியரைவிட கோழிதான் சூப்பர்டா …

மாணவன் சந்தோஷ் : எப்பிடியடா ….?

மாணவன் சுபாஷ்: நம்ம வாத்தியார் முட்டதான் போடுவார் ..ஆனால் கோழி முட்டையும் போட்டு குஞ்சும் பொரிக்கும்

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்

 

Advertisement