இந்த கடிஜோக்ஸ் படித்து பாருங்க சிரிப்பை நிறுத்த முடியாது..!

Advertisement

Tamil Mokka Joke

சிரிப்பு என்பது மனிதனோடு கூடப்பிறந்தது. இது ஓர் மனிதனின் பல விதமான சந்தர்ப்பங்களிலும் இயல்பாக வெளிப்படக்கூடிய ஒரு அருமையான நிகழ்வு. சிரிப்பு மனதையும், உடலையும் வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளார்கள். பொதுவாக நமது மனதில் ஏதாவது ஒரு மனக்குழப்பம் மற்றும் வருத்தம் உள்ளது என்றால் நம்மில் பலரும் பாடல் அல்லது ஜோக்கினை நாடுவோம். அப்படி நாம் பார்க்கும் அல்லது கேட்கும் ஜோக்ஸ்களால் உங்களின் மனதில் உள்ள குழப்பம் மற்றும் துன்பம் எளிதில் மறைந்து விடும். அப்படி உங்களின் மனதில் உள்ள மனக்குழப்பம் மற்றும் வருத்தம் ஆகியவற்றை மறந்து நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் சில மொக்க கடி ஜோக்ஸினை தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து வயிறு குலுங்க குலுங்க சிரிங்க..!

வயிறு வலிக்கின்ற அளவுக்கு சிரிக்க இதை படியுங்கள்

Marana Kadi Jokes in Tamil with Answers

1. கொசுவும் எறும்பும் School-க்கு போச்சாம்; ஆனா எறும்பு அரைநாள்லயே வீட்டுக்கு வந்துச்சாம் ஏன்.?

விடை: ஏனா அது Cut எறும்பாம் அதன் Cut அடிச்சிட்டு.

2. Shinchan அம்மா வச்ச மீன்குழம்பு காரமா இல்லாம இனிப்பா இருந்துச்சாம் ஏன்.?

விடை: ஏனா அது ஜிலேப்பி மீனாம் அதன் இனிச்சிருக்கு.

3. கல்யாணத்துக்கும், ஜல்லிக்கட்டுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்ன..?

விடை: இரண்டுத்துளையும் வளர்த்தவன் Escape ஆகிடுவான் அடக்க வரவன் தான் மாட்டிப்பான்.

4. ஒருத்தன் அவனோட மாட்டுக்கு Masala சாப்பிட கொடுத்தானாம் ஏன்.?

விடை: Masala பால் கிடைக்குதானு பாக்குறதுக்கு தான்.

5. Shinchan Juice வாங்குனா வீட்டுல இருக்க எல்லா கதவையும் சாத்திட்டு தான் குடிப்பானாம் குடிப்பானாம் ஏன்.?

விடை: ஏனா அது சாத்துக்குடி Juice-ஆம்.

வயிறு குலுங்க குலுங்க சிரிக்க கடி ஜோக்ஸ்

6. ஒரு மன்னர் போருக்கு போகும் போது ரப்பர் எடுத்துட்டு போனாராம் ஏன்.?

விடை: ஏன்னா எதிரி நாட்ட அழிக்க போனாராம். அழிக்கணும்னா ரப்பர் வேணும்தானா.

7. ராதா அவ தலையில அவளே பால எடுத்து ஊத்திக்கிட்டாளாம் ஏன்.?

விடை: ஏன்னா அது Rose Milk ஆம்.

8. கிழிக்காம Use பண்ணமுடியாத Book எது..?

விடை: வேற எது Check Book தான்.

9. காக்காவுக்கும், பணத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்ன..?

விடை: ரெண்டுமே நல்ல கரையும்.

10. முட்டைக்கு நடுவுல என்ன இருக்கும்..?

விடை: வேற என்ன “ட்” தான் இருக்கும்.

மனக்கவலை அனைத்தையும் மறந்து சிரிக்க உதவும் சில கடிஜோக்ஸ்

உங்களின் கவலைகளை மறந்து சிரிக்க சில ஜோக்ஸ்

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்
Advertisement