மனக்கவலை அனைத்தையும் மறந்து சிரிக்க உதவும் சில கடிஜோக்ஸ்..!

Advertisement

Sema Kadi Jokes in Tamil with Answers

பொதுவாக மற்ற உயிரினங்களில் இருந்து மனிதர்களை வித்தியாசப்படுத்துவது நமது சிரிப்பு தான். அப்படிப்பட்ட சிறப்புடைய நமது சிரிப்பினை நாம் ஒரு சில நேரங்களில் நமது மனவருத்தத்தின் காரணமாக தொலைத்துவிடுவோம். அப்பொழுதெல்லாம் நமது மனதின் வருத்தத்தை போக்கி அதனை நம்மை நாமே மகிழ்ச்சிப்படுத்த வகையான முயற்சிகளை மேற்கொள்வோம் அதாவது பாடல் கேட்பது அல்லது ஜோக்கினை கேட்போம் அல்லது பார்ப்போம்.

அப்படி நமது மனதில் உள்ள வருத்தத்தை போக்க நாம் கேட்கும் ஜோக்ஸ்களினால் நமது மனதில் உள்ள துன்பம் எளிதில் மறைந்து விடும். அப்படி உங்களின் மனதில் உள்ள அனைத்து கவலைகளையும் மறந்து வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிக்க வைக்கும் சில கடி ஜோக்ஸ்களை இந்த பதிவில் பதிவிட்டுளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து உங்கள் மனதில் உள்ள அனைத்து கவலைகளையும் மறந்து சிரியுங்கள்..!

Sema Kadi Jokes in Tamil

1. தொப்பை விழாம இருக்க என்ன செய்யணும்.?

விடை: இரண்டு கையாலையும் கெட்டியா புடிச்சுக்கனும்.

2. உலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது தெரியுமா.?

விடை: பல் டாக்டர் தான் ஏன்னா அவர் தான் எல்லோரோட சொத்தையும் பிடுங்கராறே.

3. படிக்கும்போது தூக்கம் வந்தா என்ன பண்ணனும்.?

விடை: படிப்புதான் வரல தூக்கமாவது வருதேனு தூங்கிடனும்.

4. கடை தோசைக்கும் வீட்டு தோசைக்கும் என்ன வித்தியாசம்.?

விடை: விளக்கமாத்தால அடிச்சிட்டு ஊத்துனா அது கடை தோசை, தோசையை ஊத்திட்டு விளக்கமாற எடுத்தா அது வீட்டு தோசை.

5. ஒருத்தன ஒரு கொசு கடிச்சுச்சாம் அனா அந்த கொசுவை அவன் அடிக்காம விட்டுட்டானாம் ஏன்.?

விடை: ஏன்னா அந்த கொசுல அவனோட இரத்தம் இருக்குல்ல அதன்.

உங்களின் கவலைகளை மறந்து சிரிக்க சில ஜோக்ஸ்

6. மூனு யானை பஸ்டாப்புக்கு வந்துச்சாம் ஆனா இரண்டு யானை மட்டும் பஸ் ஏருச்சாம் ஏன்.?

விடை: ஏன்னா, அது வழி அனுப்பு வந்துச்சாம்.

7. 7.00 மணிக்கு ஒரு பஸ் போகுது 7.40 க்கு ஒரு பஸ் போகுது எது முன்னாடி போகும்.?

விடை: இரண்டுமே முன்னாடி தான் போகும் பின்னாடி போகத்துள்ள.

8. வளராத செடி என்ன செடி.?

விடை: வேற எது கிச்சடி தான்.

9. எந்த Dress-அ துவைக்க முடியாது.?

விடை: வேற எது Address தான்.

10. ஒரு பழக்கடையில் மட்டும் எப்போதும் Comedy Channel தான் பாப்பாங்கலாம் ஏன்.?

விடை: ஏன்னா பழம் அழுகாம இருக்கனும்ல அதன்.

இந்த கடிஜோக்ஸை ஒரே ஒரு முறை படித்து பாருங்கஉங்களால் சிரிப்பை நிறுத்தவே முடியாது

கவலைகளை மறந்து சிரிக்க இதை மட்டும் ஒரு முறை படியுங்கள்

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்

 

Advertisement