வயிறு குலுங்க குலுங்க சிரிக்க கடி ஜோக்ஸ்…….

Advertisement

கடி ஜோக்ஸ் 

சிரிப்பு என்பது மனிதனோடு கூடப்பிறந்தது. இது ஓர் மனிதனின் பல விதமான சந்தர்ப்பங்களிலும் இயல்பாக வெளிப்படக்கூடிய ஒரு அருமையான நிகழ்வு. சிரிப்பு மனதையும், உடலையும் வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளார்கள். பொதுவாக நமது மனதில் ஏதாவது ஒரு மனக்குழப்பம் மற்றும் வருத்தம் உள்ளது என்றால் நம்மில் பலரும் பாடல் அல்லது ஜோக்கினை நாடுவோம். அப்படி நாம் பார்க்கும் அல்லது கேட்கும் ஜோக்ஸ்களால் உங்களின் மனதில் உள்ள குழப்பம் மற்றும் துன்பம் எளிதில் மறைந்து விடும். அப்படி உங்களின் மனதில் உள்ள மனக்குழப்பம் மற்றும் வருத்தம் ஆகியவற்றை மறந்து நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் சில மொக்க கடி ஜோக்ஸினை தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து வயிறு குலுங்க குலுங்க சிரிங்க’..!

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் கடி ஜோக்ஸ்:

  1. நபர் 1: நாய்க்கு கோபம் வந்தால் என்ன செய்யும் ?

   நபர் 2: “நாய்கிட்டதான் கேக்கணும் ”

   நபர் 1: “அதாண்டா கேட்கிறேன் பதில் சொல்லு!!”

2. நபர் 1:  “எண்டா உன் மனைவி கரண்டி, தட்டு எல்லாம் தூக்கி வீசரா ?”

 நபர் 2:  “நான்தான் சொன்னேனே, அவளுக்கு ‘வீசிங்’ ப்ராப்ளம் இருக்குன்னு.!!”

3. மாணவர் 1: “நம்ம டீச்சருக்கு என்ன ஆச்சு ?”

 மாணவர் 2: “ஏன் கேக்கறே”

மாணவர் 1: “திருக்குறளை போர்டுலே எழுதிட்டு, அவங்களே இதை எழுதினது யார்’னு கேக்கறாங்க !!”

4. ஒருத்தன் அவன் போன் ல இருந்து ஒரு நம்பருக்கு கால் பண்ணானாம் கால் போகவே இல்லயாம் ஏன் ?

பதில் : ஒரு நம்பருக்கு கால் பண்ணா எப்படி 10 நம்பருக்கு கால் பண்ணாதான போகும்…

5. அம்மா : டேய் ஏன்டா வேர்க்க வேர்க்க சாப்டுட்டு இருக்க அந்த Fan ah போட  வேண்டிதான?

மகன் : இல்லமா அப்பாதான் வேர்வை சிந்தி சாப்பிட சொன்னாரு.

7. கீழே விழுந்தாலும் காயமடையாதது எது?

பதில் : மழை

8. ஒரு பச்சைக் கல்லை கடலில் எறிந்தால் அது என்னவாகும்?

பதில் : ஈரமாகும்

9. ஆசிரியர்: “ABCD” இல் மொத்தம் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?

 மாணவர்: 4

  ஆசிரியர்: “ABCD” மட்டும் அல்ல, முழுமையான தொகுப்பைக் கூறினேன்.

  மாணவர்:  52

 ஆசிரியர்: என்ன?! எப்படி?

 மாணவர்: சிறிய எழுத்து 26 மற்றும் பெரிய எழுத்து 26.

10. நாலு “T” ஒரு “G” இருக்க ஆங்கில வார்த்தை என்ன?

பதில் : Originality

11. மரம், செடி இல்லாத காடு எது?

பதில் : சிம்கார்டு

12. இந்தியா, பாகிஸ்தான் இரண்டுக்கும் நடுவுல என்ன இருக்கு?

பதில் : கமா “,” தான் இருக்கு.

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்
Advertisement