கடி ஜோக்ஸ் கேள்வி மற்றும் பதிலுடன்..

Advertisement

Kadi Joke Questions in Tamil

பொதுவாக இன்றைய காலத்தில் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஓடி ஓடி உழைக்கின்றனர். வேலையில் இருக்கும் டென்சன், வீட்டில் இருக்கும் டென்ஷன் இரண்டும் சேர்ந்து நிம்மதி இல்லாமல் செய்கிறது. இதனால் மன அழுத்தம் வருவதோடு மட்டுமில்லாமல் உடலில் பல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்ற பழமொழி கூட இருக்கிறது. ஆனால் அதற்கு கூட நேரமில்லாமல் உழைக்கின்றனர், வீட்டிற்கு வந்த பிறகு வீட்டில் உள்ளவர்களிடம் பேசுவது கூட இல்லாமல் மொபைலை தான் பார்க்கின்றார்கள். அதனால் தான் இந்த பதிவில் கடி ஜோக்ஸ் பற்றி அறிந்து கொள்ள போகின்றோம்,.

கடி ஜோக்ஸ் கேள்வி பதில்:

1.  கிரிக்கெட் Match பார்த்துக்கிட்டு ஒரு கொசு தீடிர்னு செத்து போச்சாம் ஏன்

விடை: ஏன இந்தியா ALL OUT ஆயிடிச்சாம்.

2. புறா அணில் இரண்டில் எதுக்கு கிட்ட Letter கொடுத்த அது சரியான Address க்கு பொய் சேரும்?

விடை:  அணில் தான். ஏனா அது கிட்ட தான் Pin code இருக்கு.

3. ஒரு English தெரிஞ்ச மாடு Thetre போனதாம் அங்க போனதும் கதவை கடிக்க ஆரம்பிச்சிட்டாம். ஏன்?

விடை: ஏனா அந்த கதவுல Pullனு எழுதி இருந்திச்சாம்.

4. ஒருத்தன் சாப்டறதுக்கு முன்னாடி Fanஆ off பண்ணிட்டு சாப்பிட்டான் ஏன்?

விடை:  ஏன அவரோட அப்பா வியர்வை சிந்தி சாப்பிட சொன்னாராம்.

5. எல்லா SEAலையும் குளிக்க முடியும் ஆனால் ஒரு SEAல குளிக்க முடியாது அது என்ன SEA?

விடை:  மிக்சி

கணவன் மனைவி கடி ஜோக்ஸ்

6. ஒரு மாமி இட்லியை தலைல வெச்சி இருங்க ஏன்?

விடை:  ஏன்னா அந்த இட்லி மல்லி பூ போல இருந்திச்சாம்.

7. Costlyஆன கிழமை எது?

விடை:  வெள்ளி” கிழமை

8. நாம ஏ படுத்துக்கிட்டே தூங்குறோம்?

விடை:  நின்னுக்கிட்டே தூங்குனா கீழ விழுந்துடுவோம்.

9. கொசு நம்ம வீட்டுக்கு வராம இருக்க என்ன பண்ணனும்?

விடை:  அதுகிட்ட நம்ம வீட்டு Address கொடுக்காம இருக்கணும்.

10. சாம்பார் கோல்டுக்கு ஆகணுமுன்னா என்ன பண்ணணும்

விடை: 24 கேரட்டை உள்ளே போடணும்

11. கிணத்துல கல்ல போட்டா ஏன் மூழ்குது.?

விடை: ஏன்னா கல்லுக்கு நீச்சல் தெரியாது.

12. டாக்டர் கேட்கறாரு ஏன் ஸ்பூனை ரெண்டா உடைச்சீங்க.?

விடை: Patient 1அரை ஸ்பூன் தான டாக்டர் சாப்பிட சொன்னீங்க

13. ஒருத்தன் செய்தித்தாளை எடுத்ததும் கை வெந்து போச்சாம் ஏன்.?

விடை: ஏன்னா அது சூடான செய்தியாம்.

14. ஒரு பையன் நாய் படத்தை வரைஞ்சு வாயை மட்டும் வரையாமா விட்டுட்டானா ஏன்.?

விடை: ஏன்னா அது வாயில்லா பிராணி

15. பீட்ரூட்டை பச்சையா சாப்பிட முடியாது.?

ஏன்னா அது சிவப்பா இருக்கும்.

மரண மொக்க ஜோக் சொல்றேன் கேட்டுக்கோங்க 

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்

 

 

Advertisement