நீங்கள் வாய்விட்டு சிரிக்கிறதுக்கு சில கடி ஜோக்ஸ்..!

Advertisement

Tamil Kadi Jokes with Answers

மனிதனாக பிறந்த அனைவருக்குமே வாழ்க்கையில் தினமும் ஏதாவது ஒரு பிரச்சனை கண்டிப்பாக இருக்கும். அப்பொழுதெல்லாம் நமது மனம் மிகவும் அமைதியை இழந்து மிகவும் சோர்வாக இருக்கும். அப்பொழுதெல்லாம் நமது மனதின் சோர்வை போக்கி அதனை மகிழ்ச்சிப்படுத்த நாமும் பல வகையான முயற்சிகளை மேற்கொள்வோம் அதாவது புத்தகம் படிப்பது, பாடல் கேட்பது மேலும் ஒரு சிலர் ஜோக்கினை கேட்போம் அல்லது பார்ப்போம். அப்படி நமது மனதில் உள்ள சோர்வை போக்க நாம் கேட்கும் ஜோக்ஸ்களினால் நமது மனதில் உள்ள துன்பம் எளிதில் மறைந்து விடும். அப்படி உங்களின் மனதில் உள்ள அனைத்து கவலைகளையும் மறந்து வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிக்க வைக்கும் சில கடி ஜோக்ஸ்களை இந்த பதிவில் பதிவிட்டுளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து உங்கள் மனதில் உள்ள அனைத்து கவலைகளையும் மறந்து சிரியுங்கள்..!

இந்த கடிஜோக்ஸ் படித்து பாருங்க சிரிப்பை நிறுத்த முடியாது

Tamil Mokka Jokes with Answers

  1. காபியை விட டீ தான் பெட்டெர் ஏன்..?

விடை: ஏன்னா டீ ல ஒரே ஒரு ஈ தான் இருக்கு காபில இரெண்டு ஈ இருக்குலா.

2. மீனுக்கு பிடிக்காத கிழமை எது..?

விடை: Fry (Friday) தான்.

3. நெஞ்சை தொடும் ஒரு வார்த்தை சொல்லுங்க பார்க்கலாம்..?

விடை: பனியன்.

4. INITIAL உள்ள மிருகம் எது..?

விடை: O நாய் (O.நாய்) தான்.

5. இந்த ஒரு ஹோட்டல்ல மட்டும் எந்த சாப்பாடுமே சூடாவே கிடைக்காது..?

விடை: ஆரிய பவன்.

வயிறு வலிக்கின்ற அளவுக்கு சிரிக்க இதை படியுங்கள்

6. நாம ஏன் படுத்துகிட்டே தூங்குறோம்..?

விடை: நின்னுக்கிட்டே தூங்குனா கீழ விழுந்துடுவோம்.

7. எலுமிச்சை பழம் ஆணா இல்ல பெண்ணா..?

விடை: ஆண் தான், புழிஞ்சா சார்(sir) வருத்துல.

8. கசப்பே இல்லாத மொழி எது..?

விடை: தேன்மொழி.

9. Made in Japan (மேட் இன் ஜப்பான்) என்பதற்கு எதிரானது என்ன..?

விடை: Pallam in Japan (பள்ளம் இன் ஜப்பான்).

10. உப்பு சைவமா, அசைவமா..?

விடை: சாம்பார்ல போட்டா சைவம். கறிக்கொழம்புல போட்டா அசைவம்.

வயிறு குலுங்க குலுங்க சிரிக்க கடி ஜோக்ஸ்

மனக்கவலை அனைத்தையும் மறந்து சிரிக்க உதவும் சில கடிஜோக்ஸ்

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்
Advertisement