Sema Kadi Jokes in Tamil Question and Answer
மனிதனாக பிறந்த அனைவருக்குமே வாழ்க்கையில் தினமும் ஏதாவது ஒரு பிரச்சனை கண்டிப்பாக இருக்கும். அப்பொழுதெல்லாம் நமது மனம் மிகவும் அமைதியை இழந்து மிகவும் சோர்வாக இருக்கும். அப்பொழுதெல்லாம் நமது மனதின் சோர்வை போக்கி அதனை மகிழ்ச்சிப்படுத்த நாமும் பல வகையான முயற்சிகளை மேற்கொள்வோம் அதாவது புத்தகம் படிப்பது, பாடல் கேட்பது மேலும் ஒரு சிலர் ஜோக்கினை கேட்போம் அல்லது பார்ப்போம். அப்படி நமது மனதில் உள்ள சோர்வை போக்க நாம் கேட்கும் ஜோக்ஸ்களினால் நமது மனதில் உள்ள துன்பம் எளிதில் மறைந்து விடும்.
அப்படி உங்களின் மனதில் உள்ள அனைத்து கவலைகளையும் மறந்து சிரிக்க வைக்கும் சில கடி ஜோக்ஸ்களை இந்த பதிவில் பதிவிட்டுளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து உங்கள் மனதில் உள்ள அனைத்து கவலைகளையும் மறந்து சிரியுங்கள்..!
உங்களை சிரிக்க வைக்க சில மொக்க கடிஜோக்ஸ் படித்து பாருங்க சிரிப்பை அடக்கவே முடியாது
Tamil Mokka Jokes
1. Fan-க்கும் பேன்னுக்கும் என்ன ஒற்றுமை..?
விடை: இரண்டுமே தலைக்கு மேல தான சுத்துது.
2. எல்லா ஆவியையும் பிடிக்கலாம் ஆனால் ஒரே ஒரு ஆவியை மட்டும் பிடிக்க முடியாது அது என்ன..?
விடை: கொட்டாவி.
3. உலகத்துலயே எந்த நரி பெரிய நரி..?
விடை: Dictionary.
4. எல்லா பிரியாணிக்கும் டெஸ்ட் வச்சா எந்த பிரியாணி Fail ஆகிடும்.?
விடை: முட்டை பிரியாணி தான்.
5. ஒரு மாசத்துல மொத்தம் எத்தனை நாலு இருக்கு..?
விடை: மூணு நாலு தான்.! எப்படின்னா 4,14,24.
நீங்கள் வாய்விட்டு சிரிக்கிறதுக்கு சில கடி ஜோக்ஸ்
6. சாப்பிட முடியாத கனி எது.?
விடை: பால்கனி தான்.
7. ரொம்ப குளிர்ச்சியான இங்கிலிஷ் லெட்டர் எது.?
விடை: “B” தான். ஏன்னா அதுதான் AC -க்கு நடுவுல இருக்கு.
8. தினேஷ் எப்போதும் Chair-லயே உட்கார்ந்துக்கிட்டே இருப்பானாம் ஏன்.?
விடை: ஏன்னா அவன் (Chair)man ஆம்.
9. தண்ணீயே இல்லாத கடல் எங்கே இருக்கு..?
விடை: வேறெங்க MAP -ல தான் இருக்கும்.
10. டன் கணக்கில் துணி துவைக்கும் இடம் எது.?
விடை: Washing(Ton) தான்.
இந்த கடிஜோக்ஸ் படித்து பாருங்க சிரிப்பை நிறுத்த முடியாது
மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | கடி ஜோக்ஸ் |