வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்கள் தலையில் இருக்கும் பேன் பிரச்சனைக்கு சரியான தீர்வு இது மட்டும் தான்…வேணா Try பண்ணிப்பாருங்க…

Updated On: September 22, 2023 11:05 AM
Follow Us:
remove lice from your hair using home remedies in tamil
---Advertisement---
Advertisement

பேன் பிரச்சனைக்கு சரியான  தீர்வு 

சிறுவர்கள், பெரியவர்கள் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது பேன்! குறிப்பாக, இளம் வயதினருக்கு பல நேரங்களில் தர்மசங்கடத்தைத் தரும் ஒன்று. இதைக் கண்டுகொள்ளாமல்விட்டால், முடி உதிர்வு ஏற்படும்; தலை வழுக்கையாகவும் வாய்ப்பு உண்டு. அதோடு சில தோல் வியாதிகள் உருவாகவும் இது வழிவகுக்கும்.

வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவை இந்த பேன் உருவாக  முக்கியக் காரணங்கள். இந்த பிரச்சனையை போக்க நாமும் பலவகையான ஷாம்பு என பல முயற்சிகள் எடுத்திருப்போம். ஆனால் அதற்கு பலன் என்னமோ பூஜ்யம் தான். இயற்கையாக மரம், செடி, கொடிகளிலிருந்து கிடைக்கக் கூடியவை, நம் வீட்டுச் சமையல் அறையில் இருக்கும் சில பொருள்கள் போதும் நமது பேன் பிரச்சனையை தீர்க்க. வாருங்கள் எளிமையான முறையில் உங்கள் பேன் பிரச்னையை தீர்ப்பது என்று இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேங்காய் எண்ணெய்-எலுமிச்சைச் சாறு மசாஜ்:

ஒரு பாத்திரத்தில், உங்களுக்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெய், அதனுடன் 2 இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறு எடுத்துக் கொண்டு நன்றாக கலக்கவும்.

இந்தக் கலவையை உங்கள் தலைமுடியின் அனைத்து பகுதிகளிலும் நன்றாக மசாஜ் செய்யவேண்டும்.

உங்கள் தலையை அந்த எண்ணெயில் 20 நிமிடங்கள் வரை ஊறவைத்து பிறகு செம்பருத்தி இலை சாறை கொண்டு உங்கள் தலையை அலச வேண்டும்.

இவ்வாறு செய்வதால் எலுமிச்சையில் உள்ள அமிலங்கள் உங்கள் தலையில் உள்ள பேன் பிரச்சனைகளை குறைக்கும்.

chemical கலந்த ஹேர் டை வேண்டாங்க வீட்டில தயாரித்த இயற்கை ஹேர் டை try பண்ணி பாருங்க….

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now