River delta என்றால் என்ன தெரியுமா…

Advertisement

River Delta in tamil 

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் River Delta என்றால் என்ன அதற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது அதனை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும் ஆனால் அதனை யாரும் முழு ஈடுபாடுடன் செய்வதில்லை. முக்கியமாக அனைவருக்கும் அனைத்தும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த உலகத்தில் நாம் பிறக்கும் போதே அனைத்தையும் தெரிந்துகொண்டு பிறப்பதில்லை. நாம் வளரும் போதே சில வார்த்தைகளையும் அர்த்தங்களையும் கற்றுக்கொண்டு இருப்போம். ஆனால் நாம் தினசரி பேசும் சில வார்த்தைகளுக்கு மட்டுமே அர்த்தம் தெரியும் ஒரு சில வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது அந்த வகையில் இன்று River Delta என்றால் என்ன அர்த்தம் என்று தெரிந்துகொள்வோம் வாங்க..!

River Delta Meaning in Tamil

River delta என்பது அர்த்தம் ஆற்று கழிமுகம் என்று அர்த்தம். அதாவது, ஆற்றின் வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட மண் ஆறு மற்றும் கடல் இரண்டும் கலக்கும் இடத்தில் ஆற்றின் வேகம் குறைந்து படிந்து மண்ணால் உருவாகும் ஒரு நிலவமைப்பு ஆகும்.

river delta meaning in tamil

ஆறுகள் மண், மணல், குப்பைக் கூளங்கள் முதலியவற்றை அடித்துக்கொண்டு வேகமாக ஓடும். ஆறு கடல் அல்லது ஏரியில் கலக்கும்போது அதன் வேகம் குறைந்து, ஆற்றோடு வந்த மண்ணும் மணலும் வேகம் குறையும் இடத்தில் படிந்துவிடும். மண் படிந்து கொண்டே இருப்பதால் நாளடைவில் அங்கு ஒரு படுகை உண்டாகிறது. அதனையே ஆற்றுக் கழிமுகம் அல்லது River Delta என்று அழைக்கின்றனர்.

கேப்சஷன் என்றால் என்ன? 

டெல்டா என்ற சொல் கிரேக்க மொழியில் இருந்து வந்தது. மூன்று கிளைகள் இணைவதை குறிக்கிறது. டெல்டா என்பதன் கிரேக்க குறியீடு Δ

இரண்டு நதிகள் கடலோடு இணையும்போது அது முக்கோண வடிவில் காணப்படும் அதனால் இந்த பகுதிக்கு டெல்டா என்ற பெயர் வந்திருக்கலாம்.

டெல்டா பகுதில் படிந்துள்ள மண்ணுக்கு வண்டல் மண் என்று பெயர். இது வளம் நிறைந்தது. இப்படுகைகளில் பயிர் மிகச் செழிப்பாக வளரும்.

river delta meaning in tamil

 

CTR என்பதற்கான அர்த்தம் என்ன தெரியுமா.?

உலகின் மிக பெரிய டெல்டா வங்காளதேஷ் மற்றும் இந்தியாவின் தெற்காசிய பகுதியில் காணப்படும் சுந்தரவன காடுகள் பகுதில் காணப்படும் காவேரி டெல்டா ஆகும். இந்தகங்கை டெல்டா 350 கிலோமீட்டர் பரப்பளவில் காணப்படுகிறது. இந்த டெல்டா கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் மேக்னா நதிகள் இணைவதால் ஏற்படுகிறது. தமிழ் நாட்டில் மொத்தம் 8 மாவட்டங்கள் டெல்டா பகுதியாக உள்ளது. இவற்றில் மிக அதிகமான வண்டல் மண் காணப்படும் மாவட்டங்களாக தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் திகழ்கிறது.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement