ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி – சாய் பாபா பாடல் தமிழ் வரிகள்…

Advertisement

சாய் பாபா பக்தி பாடல் வரிகள்

பொதுவாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடவுளை வணங்குவார்கள். அப்படி வணங்கும் போது அவர்களுக்கு உரிய பத்தி, சூடம், சாம்பிராணி போன்றவற்றை காண்பித்து வணங்குவோம். அதோடு அவர்களுக்கு உரிய பிரசாதம் வைத்து வணங்குவோம். அப்படி வணங்கும் போது கடவுளின் முழு அருளும் கிடைக்கும். அதோடு கடவுளுக்கு உரிய பாடல்கள், மந்திரங்கள், போற்றிகள் போன்றவற்றை துதிப்பதாலும் கடவுளின் அருள் முழுமையாக கிடைக்கும். அந்த வகையில் இன்று சாய் பாபாவை வணங்க பக்தி பாடல் தெரிந்துகொள்வோம்.

சீரடி சாய்பாபாவின் ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி என்னும் ஆரத்தி பாடல்கள் மனதிற்கு சந்தோஷத்தையும், அமைதியை கொடுப்பது மட்டுமல்லாமல் மக்களின் ஆன்மீக உணர்வினை தூண்டக்கூடியதாக அமைந்துள்ளது இந்த சாய்பாபா ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி பாடல். வாருங்கள் இன்று சாய் பாபாவின் ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி பாடல் வரிகளை தெரிந்துகொள்வோம்

ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி – சாய் பாபா பாடல் தமிழ் வரிகள்:

ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி

சீரடி வாசனே என் சாயி

ஜகத்குரு சாயி பாபா

 

ஜெய ஜெய சாயி பாபா

சச்சிதானந்த சாயி

சத்யரூபனே சாய் பாபா

தூய பரம்பொருள் துவாரக மாயையில்

அழைப்பான் சீரடிக்கு.. சுவாமி அழைப்பான்

சீரடிக்கு அழைத்ததும் வருவான் பாபா

அருள் கரம் தருவான் பாபா

அன்னையாய் அணைத்திடுவான்

மாத்ருரூபனே சாய் பாபா

ஷிர்டி சாய்பாபா பாடல்கள் :

ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாய்

நீரும் நெருப்பாய் சுடரே வைத்தாயே

நிர்மலனே சாயி.. எங்கள் நிர்மலனே சாயி

ஆத்ம ஜோதியே பாபா

ஆனந்த கடலே பாபா

சீரடியில் கண்டோம்

சிவ ரூபன் சாய் பாபா

 

ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி…

திருவுதியால் பிணி தீர்த்திடும் பாபா

உன் மகிமைக்கு அளவில்லையே

உன் மகிமைக்கு அளவில்லையே

துணியில் கனிந்த பாபா

யோக மலரே பாபா

புண்முக தரிசனமே

ராம ரூபனே சாய் பாபா

Om Jai Jeya Jeya sai baba song Tamil Lyrics:

ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி….

குருவாய் வந்தாய் அருளை பொழிந்தாய்

தரணியில் தவமானாய்.. நீ தரணியில் தவமானாய்

எத்தனை தவங்கள் பாபா

உன்னை காண பாபா

இக்கணம் உனை தொழுதோம்

தத்த ரூபனே சாய் பாபா

ஷிர்டி சாய்பாபா பாடல்கள்

ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி….

தனமும் கல்வியும் தளர்வில்லா மனமும்

நல்லவை நாளும் தரும்.. தினம் நல்லவை நாளும் தரும்

வஞ்சனை இல்லா பாபா

நெஞ்சங்கள் எல்லாம் பாபா

சாயி வாழும் இடம்

பரப்ரம்மனே சாய் பாபா

சாய்பாபா 108 போற்றி..! | Sai Baba 108 Mantra in Tamil

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement