EPF Interest Rate 2024 in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் (Employee Provident Fund Interest Rate in Tamil) பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. EPF என்பது பணிபுரிபவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு சேமிப்பு ஆகும். இதன் மூலம் பணியாளர்களின் சம்பள தொகையில் ஒரு குறிப்பிட்ட பணத்தை எடுத்து அதனை இரட்டிப்பாக இறுதியில் தருவார்கள். இந்த முறையை 20 -க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு பொருந்தும்.
EPF வட்டி விகிதம் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதனால், தான் அனைத்து பணியாளர்களும் EPF வட்டி விகிதம் பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். இதன் வட்டி விகிதம் அதிகரித்தால் பணியாளர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும் என்று கூறுகிறார்கள். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் EPF Interest Rate 2024 பற்றியும் கடந்த 10 ஆண்டுகளில் உள்ள EPF Interest Rate பற்றியும் பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
PF பணம் Onlineல் எடுப்பது எப்படி?
Employee Provident Fund Interest Rate in Tamil:
2024 ஆம் ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (Employee Provident Fund) வட்டி விகிதம் 8.25% ஆகும். EPF வட்டி விகிதம் கடந்த ஆண்டில் 8.15% இருந்த நிலையில் இந்த ஆண்டு 8.25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.EPF Interest Rate Last 10 Years:
வருடம் | வட்டி விகிதம் |
2016-17 | 8.65% |
2017-18 | 8.55% |
2018-19 | 8.65% |
2019-20 | 8.50% |
2020-21 | 8.50% |
2021-22 | 8.10% |
2022-23 | 8.15% |
2023-24 | 8.25% |
EPF இன் முக்கிய சிறப்பம்சங்கள்:
- ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது ஒரு ஓய்வூதிய பலன்கள் திட்டமாகும். இதில் ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் மாதந்தோறும் அடிப்படை ஊதியத்தில் ஒரு சிறிய பகுதியை பங்களிக்கின்றனர். இதேபோன்று வேலை வழங்குநரும் திட்டத்திற்கு அவர்கள் சார்பாக இதேபோன்ற தொகையை வழங்குகிறார்.
- பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ( EPFO ) மூலம் நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வொரு பாணியாளருக்கும் தனிப்பட்ட உலகளாவிய கணக்கு எண் ( UAN ) வழங்கப்படும். UAN எண் ஆனது ஊழியரின் EPF கணக்குடன் இணைக்கப்படும். இது ஊழியரின் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும்.
- EPF -ல் முதலாளியும் பணியாளரும் பங்களிப்பு இரண்டும் உள்ளது. EPF இல் பணியாளரின் பங்களிப்பு – 12% மற்றும் EPF க்கு முதலாளியின் பங்களிப்பு – 3.67% ஆகும்.
- ஊதிய உச்சவரம்பு ரூ.15,000.
- 20 -க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு இம்முறை பொருந்தும்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி விதிகள்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |