Which Bank Gives High Interest For Fixed Deposit in Tamil
வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9.50% வட்டி அளிக்கும் வங்கிகள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. நாம் அனைவருமே ஏதிர்கால தேவையாக பல்வேறு சேமிப்பு திட்டங்களில் சிறந்த சேமிப்பு திட்டத்தினை ஆராய்ந்து அதில் முதலீடு செய்து வருவோம்.
நாம் தேர்வு செய்யும் சேமிப்பு திட்டம் அதிக வட்டி அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால், சேமிப்பு திட்டத்திற்கு அதிக வட்டி தரக்கூடிய பேங்க் எதுவென்று நம்மில் பலபேருக்கு தெரியாது. ஆகையால், இப்பதிவின் வாயிலாக சேமிப்பு திட்டங்களில் ஒன்றான FD (Fixed Deposit) திட்டத்திற்கு அதிக 9.50% வட்டி அளிக்கக்கூடிய வங்கிகள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.
Senior Citizens Fixed Deposits High Interest Rates:
மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு ஸ்மால் வங்கிகள் 9.21 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன. அந்த வங்கிகள் பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.
1. யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி:
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி வங்கி ஆனது Senior Citizens -களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் கால அளவில் டெபாசிட் செய்பவர்களுக்கு 4.50% முதல் 9.50% வரை வட்டி விகிதம் அளிக்கிறது. 1001 நாட்கள் முதிவு காலம் உள்ள டெபொசிட்டுகளுக்கு FD -யின் அதிகபட்ச வட்டி விகிதம் 9.50% ஆகும்.
2.உத்கர்ஷ் ஸ்மால் வங்கி:
உத்கர்ஷ் ஸ்மால் வங்கி ஆனது, Senior Citizens -களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் கால அளவில் டெபாசிட் செய்பவர்களுக்கு 4.60% முதல் 9.10% வரை வட்டி விகிதம் அளிக்கிறது.
மாதம் Rs.6,375/- வட்டி பெற எவ்வளவு Deposit செய்யலாம் ?
3.சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ்:
சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் ஆனது, Senior Citizens -களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் கால அளவில் டெபாசிட் செய்பவர்களுக்கு 4.50% முதல் 9.10% வரை FD வட்டி விகிதம் அளிக்கிறது.
4.ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி:
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஆனது, Senior Citizens -களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் கால அளவில் டெபாசிட் செய்பவர்களுக்கு 3.50% முதல் 9% வரையிலான FD வட்டி விகிதம் அளிக்கிறது.
5.ஈகுடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி:
ஈகுடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஆனது, Senior Citizens -களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் கால அளவில் டெபாசிட் செய்பவர்களுக்கு 4% முதல் 9% வரையிலான FD வட்டி விகிதம் அளிக்கிறது.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |