3 ஆண்டுகால FD திட்டத்திற்கு 8.60 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள் இதுதான்..!

Advertisement

Fixed Deposit For 3 Years

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் 3 ஆண்டுகால FD திட்டத்திற்கு 8.60 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. இக்காலத்தில் சேமிப்பு என்பது மிகவும் இன்றையமையாத ஒன்றாக இருக்கிறது. அதனால், பலரும் சேமிக்க தொடங்கி விட்டார்கள். அப்படி சேமிக்கும் முன்பாக எந்த சேமிப்பு திட்டத்தில் சேமித்தால் அதிக வட்டி கிடைக்கும் என்றும், எந்த சேமிப்பு திட்டம் நல்லது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி பார்க்கையில் பெரும்பாலானவர்களின் விருப்பம் FD -யாக தான் இருக்கிறது..

அதாவது, சேமிக்க விரும்பும் பெரும்பாலானவர்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் தான் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். எனவே, அப்படி Fixed Deposit திட்டத்தில் சேமிக்க விரும்பும் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இப்பதிவில் 3 ஆண்டுகால டெபாசிட்டுக்கு 8.60 வட்டி விகிதம் வழங்கும் வங்கிகள் பற்றி விவரித்துள்ளோம்.  FD திட்டத்தில் அதிகபட்சம் 8.60 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

5 ஆண்டில் 6,98,749 ரூபாயினை அளிக்கும் இந்தியன் வங்கி பிக்சட் டெபாசிட் திட்டம்..!

Which Bank is Best For Fixed Deposit for 3 Years in Tamil:

 fixed deposit for 3 years

1. State Bank of Mauritius (SBM):

எஸ்பிஎம் வங்கி ஆனது, 3 வருட பிக்சட் டெபாசிட்டிற்கு ஜெனரல் சிட்டிசனுக்கு 8.10% வட்டி விகிதமும், மூத்த குடிமக்களுக்கு (Senior Citizen) 8.60% வரை வட்டி விகிதம் அளிக்கிறது.

2. Development Credit Bank Ltd (DCB):

டிசிபி வங்கி ஆனது, 3 வருட  பிக்சட் டெபாசிட்டிற்கு ஜெனரல் சிட்டிசனுக்கு 8.00% வட்டி விகிதமும், மூத்த குடிமக்களுக்கு (Senior Citizen) 8.50% வரை வட்டி விகிதம் அளிக்கிறது.

3. Yes Bank:

Yes Bank ஆனது, 3 வருட பிக்சட் டெபாசிட்டிற்கு ஜெனரல் சிட்டிசனுக்கு 7.75% வட்டி விகிதமும், மூத்த குடிமக்களுக்கு (Senior Citizen) 8.25% வரை வட்டி விகிதம் அளிக்கிறது.

4. Deutsche Bank:

டொய்ச்சு வங்கி ஆனது, 3 வருட பிக்சட் டெபாசிட்டிற்கு ஜெனரல் சிட்டிசனுக்கு 7.75% வட்டி விகிதமும், மூத்த குடிமக்களுக்கு (Senior Citizen) 7.75% வரை வட்டி விகிதம் அளிக்கிறது.

மாதாந்திர வருமானத் திட்டம் Vs பிக்சட் டெபாசிட் இவ்விரண்டில் முதலீடு செய்ய எது ஏற்றது..?

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement