Punjab National Bank Special Fixed Deposit 2024
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் சேமிப்பு திட்டத்தை பற்றி தான். பஞ்சாப் தேசிய வங்கி அல்லது பஞ்சாப் நேசனல் வங்கி இந்தியாவில் செயல்பட்டுவரும் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இந்த வங்கி தற்பொழுது ஸ்பெஷல் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை மாற்றி அமைத்துள்ளனர்.
ஆக திட்டத்திற்கான முதலீட்டு காலம் எவ்வளவு, இந்த திட்டத்திற்கு தற்பொழுது பஞ்சாப் நேஷனல் வங்கியில் எவ்வளவு வட்டி வழங்கபடுகிறது. என்பது குறித்த முழுமையான தகவல்களை இப்பொழுது நாம் இந்த பதிவின் மூலமாக தெரிந்துகொள்வோம். பஞ்சாப் வங்கியில் இந்த ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் இந்த பதிவை முழுமையாக படித்து தகவலை தெரிந்துகொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
பஞ்சாப் நேஷனல் பேங்க் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் 2024:
பொதுவாக ரெகுலர் டெபாசிட்டை விட ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் என்பது குறுகிய காலம் மட்டுமே இருக்கும். ஆக குறுகிய காலத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் ஸ்பெஷல் பிக்சல் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
அந்த வகையில் இந்த பஞ்சாப் நேஷனல் வங்கி ஸ்பெஷல் டெபாசிட் முதலீட்டு திட்டமும் பொருந்து.
இந்த வங்கியில் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால் குறைந்தபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து இந்த திட்டத்தில் கணக்கு திறக்கலாம். அதுவே அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
திட்டத்திற்கான முதலீட்டு காலம் 300 நாட்கள் ஆகும்.
நீங்கள் 60 வயதிற்கு மேல் இருந்தால் உங்களுக்கு இந்த திட்டத்தில் பொது மக்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட கொஞ்சம் கூடுதலாக வட்டி கிடைக்கும்.
அதுவே 80 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக வட்டி கிடைக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
போஸ்ட் ஆபீஸ் FD வட்டி விகிதங்கள் 2024
எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது:
- பொது மக்களுக்கு 7.10% வட்டி வழங்கப்படுகிறது.
- 60 வயது உள்ளவர்களுக்கு 7.60% வட்டி வழங்கப்படுகிறது.
- 80 வயது உள்ளவர்களுக்கு 7.90% வட்டி வழங்கப்படுகிறது.
எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்:
நீங்கள் இந்த திட்டத்தில் 300 நாட்கள் முடிவடைந்த பிறகு, நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதை இப்பொழுது கீழ் உள்ள அட்டவணையில் காண்போம் வாங்க.
முதலீட்டு தொகை | பொது மக்களுக்கு வழங்கப்படும் வட்டி | 60 வயதினருக்கு வழங்கப்படும் வட்டி | 80 வயதினருக்கு வழங்கப்படும் வட்டி |
10,000/- | 596/- | 638/- | 664/- |
25,000/- | 1,489/- | 1,596 | 1,660/- |
50,000/- | 2,978/- | 3,192/- | 3,321/- |
1,00,000/- | 5,955/- | 6,383/- | 6,641/- |
2,00,000/- | 11,910/- | 12,767/- | 13,282/- |
4,00,000/- | 23,820/- | 25,534/- | 26,564/- |
8,00,000/- | 47,640/- | 51,068/- | 53,129/- |
10,00,000/- | 59,550/- | 63,834/- | 66,411/- |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2024-ஆம் ஆண்டுக்கான அனைத்து வங்கிகளின் வீட்டு கடன் வட்டிவிகிதம்..!
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |