Indian Overseas Bank Special FD Interest Rates 2024
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. நமது பொதுநலம்.காம் வலைத்தளத்தில் பல வகையான சேமிப்பு திட்டங்களை பற்றி பதிவு செய்து வருகின்றோம். அவை எல்லாம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். அந்த வகையில் இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் சேமிப்பு திட்டத்திற்கு தற்பொழுது எவ்வளவு வட்டி வழங்கபடுகிறது.
இந்த ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம் எவ்வளவு நாட்கள், எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பது குறித்த முழுமையான தகவல்களை பற்றி தான் நாம் இப்பொழுது தெரிந்துகொள்ள போகிறோம் ஆக பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்..
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
18 மாதத்தில் Rs.1,21,702/- வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம்:
இந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் கால அளவு எவ்வளவு நாட்கள் என்றால் வரு, 444 நாட்கள் மட்டுமே.
குறிப்பாக இந்த திட்டத்தின் டெபாசிட் முறை என்பது One Time Investment ஆகும். அதாவது இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்ய முடியும். நீங்கள் முதலீடு செய்த இந்த தொகையை நீங்கள் 444 நாட்களுக்கு பிறகு பெற்றுக்கொள்ளலாம், அதேபோல் இந்த முதலீட்டு தொகைக்கான வட்டியையும் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் நீங்கள் இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் டெபாசிட் செய்யலாம், அதிகபட்சமாக நீங்கள் 2 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொது மக்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட 0.50% வட்டி கூடுதலாக கிடைக்கும்.
அதேபோல் 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொது மக்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட 0.75% வட்டி கூடுதலாக கிடைக்கும்.
மேலும் இந்த திட்டத்தில் நாமினேஷன் வசதியும் இருக்கிறது. அதேபோல் கடன் உதவி பெரும் வசதியும் இந்த திட்டத்தில் இருக்கிறது.
இது போக இந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே செயல்படும். அதாவது பிப்ரவரி 10, 2024 முதல் மார்ச் 31, 2024 வரை மட்டுமே செயல்படும் ஆக நீங்கள் அதற்கு இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால் முதலீடு செய்துகொள்ளவும்.
எவ்வளவு வட்டி வழங்கபடுகிறது?
தற்பொழுது இந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு எவ்வளவு வட்டி வழங்கபடுகிறது என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
முதலீட்டு காலம் | பொது மக்கள் வழங்கப்படும் வட்டி | 60 வயது உள்ளவர்களுக்கு வழங்கப்படும் வட்டி | 80 வயது உள்ளவர்களுக்கு வழங்கப்படும் வட்டி |
444 நாட்கள் | 7.30% | 7.80% | 8.05% |
எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?
முதலீட்டு தொகை | பொது மக்கள் வழங்கப்படும் வட்டி | 60 வயது உள்ளவர்களுக்கு வழங்கப்படும் வட்டி | 80 வயது உள்ளவர்களுக்கு வழங்கப்படும் வட்டி |
10,000/- | 919 | 985 | 1018 |
25,000/- | 2299 | 2463 | 2545 |
50,000/- | 4599 | 4926 | 5090 |
1,00,000/- | 9198 | 9852 | 10180 |
3,00,000/- | 27596 | 29557 | 30541 |
5,00,000/- | 45993 | 49262 | 50903 |
8,00,000/- | 73590 | 78820 | 81445 |
10,00,000/- | 91987 | 98525 | 101806 |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதம் Rs.6,375/- வட்டி பெற எவ்வளவு Deposit செய்யலாம் ?
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |