444 நாளில் Rs.97,870/- வட்டி தரும் சேமிப்பு திட்டம்..! Canara Bank Special Fixed Deposit Scheme 2024..!
வணக்கம் நண்பர்களே.. இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் கனரா வங்கியின் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டத்தை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். ஆக பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் கனரா வங்கியில் ஸ்பெஷல் டெபாசிட் முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால் இந்த பதிவு உங்களுக்கானது. ஆம் நண்பர்களே இங்கு கனரா வங்கியின் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் முதலீட்டு திட்டத்திற்கு தற்பொழுது எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது, இந்த முதலீட்டு திட்டத்தின் முதலீட்டு காலம் எவ்வளவு நாட்கள், எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பது குறித்த முழுமையான விவரங்களை பதிவு செய்துள்ளோம், ஆக பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
18 மாதத்தில் Rs.1,21,702/- வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!
கனரா வங்கி ஸ்பெஷல் பிக்சட் டெபிசிட் முதலீட்டு திட்டம் 2024:
இந்த திட்டத்தின் டெபாசிட் முறை என்பது Lumpsum முறை ஆகும். அதாவது இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்ய முடியும்.
இந்த கனரா வங்கியின் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் கால அளவு எவ்வளவு நாட்கள் என்றால் வரு, 444 நாட்கள் மட்டுமே.
நீங்கள் இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் டெபாசிட் செய்யலாம், அதிகபட்சமாக நீங்கள் 2 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
மேலும் இந்த திட்டத்தில் நாமினேஷன் வசதியும் இருக்கிறது. அதேபோல் கடன் உதவி பெரும் வசதியும் இந்த திட்டத்தில் இருக்கிறது.
இது போக இந்த கனரா வங்கியின் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே செயல்படும். அதாவது பிப்ரவரி 10, 2024 முதல் மார்ச் 31, 2024 வரை மட்டுமே செயல்படும் ஆக நீங்கள் அதற்கு இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால் முதலீடு செய்துகொள்ளவும்.
எவ்வளவு வட்டி வழங்கபடுகிறது?
தற்பொழுது இந்த கனரா வங்கியின் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு எவ்வளவு வட்டி வழங்கபடுகிறது என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
முதலீட்டு காலம் | பொது மக்களுக்கு வழங்கப்படும் வட்டி | மூத்தகுடி மக்களுக்கு வழங்கப்படும் வட்டி |
444 நாட்கள் | 7.25% | 7.75% |
எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?
முதலீட்டு தொகை | பொது மக்களுக்கு வழங்கப்படும் வட்டி | மூத்தகுடி மக்களுக்கு வழங்கப்படும் வட்டி |
25,000/- | 2,283/- | 2,446/- |
50,000/- | 4,566/- | 4,893/- |
1,00,000/- | 9,133/- | 9,787/- |
2,00,000/- | 18,267/- | 19,574/- |
4,00,000/- | 36,534/- | 39,148/- |
7,00,000/- | 63,934/- | 68,509/- |
10,00,000/- | 91,335/- | 97,870/- |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதம் Rs.6,375/- வட்டி பெற எவ்வளவு Deposit செய்யலாம் ?
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |