MIS or FD Which is Better in Tamil
இன்றைய காலகட்டத்தில் அனைவருக்குமே ஏதாவது ஒரு வகையில் பணம் என்பது அதிக அளவு தேவைப்படுகிறது. அதனால் அனைவருமே தங்களிடம் உள்ள பணத்தை அதிக அளவு பெருக்கி கொள்ள வேண்டும் என்பதால் ஏதாவது ஒரு வகையில் சேமிக்க வேண்டும் அல்லது முதலீடு செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறார்கள். அதனால் அனைவருமே தங்களது பணத்தை சேமிக்க அல்லது முதலீடு செய்கிறார்கள். ஆனால் இன்றும் ஒரு சிலருக்கு சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதில் பலவகையான கேள்விகள் மற்றும் குழப்பங்கள் உள்ளது. அதனால் தான் நமது பதிவின் வழியாக தினமும் ஒரு முதலீட்டு முறை பற்றி விரிவாக அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இந்த பதிவில் மாதாந்திர வருமானத் திட்டம் Vs பிக்சட் டெபாசிட் முதலீடு செய்ய எது சிறந்தது என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..
RD Vs PPF இந்த இரண்டில் எதில் முதலீடு செய்வது சிறந்தது தெரியுமா
மாதாந்திர வருமானத் திட்டம் Vs பிக்சட் டெபாசிட் முதலீடு செய்ய எது சிறந்தது..?
மாதாந்திர வருமானத் திட்டம் (MIS) என்பது பணத்தை வழங்குபவருடன் சேர்த்து, அதன் மூலம் வருமானம் ஈட்டும் கருவியாகும். இதில் நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ற மாதமாத வருமானத்தை பெறலாம்.
பிக்சட் டெபாசிட் என்பது வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் NBFC -கள் நிலையான வைப்புகளை நிதி தயாரிப்புகளாக வழங்குகின்றன. அதாவது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCகள்) மற்றும் வங்கிகளால் வழங்கப்படும் மிகவும் பாதுகாப்பான முதலீட்டு சேவைகள் ஆகும்.
நிலையான வங்கி வைப்புத் தொகையானது வழக்கமான சேமிப்புக் கணக்கை விட அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது. பெயர் குறிப்பிடுவது போல, வைப்புத் தொகையும் வட்டி விகிதமும் வங்கி FD -யின் காலத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிக்சட் டெபாசிட் பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 Fixed Deposit பற்றிய தகவல்கள்
மாதாந்திர வருமானத் திட்டம் Vs பிக்சட் டெபாசிட் வேறுபாடுகள்:
சிறப்புகள் | பிக்சட் டெபாசிட் | மாதாந்திர வருமானத் திட்டம் |
ஆபத்து | குறைந்த ஆபத்து | அதிக ஆபத்து (நிலையான வைப்புத்தொகையுடன் ஒப்பிடும்போது) |
வட்டி விகிதம் | நிலையான வட்டி விகிதம் | உத்தரவாதமான வட்டி விகிதம் இல்லை
ஃபிக்ஸட் டெபாசிட்களுடன் ஒப்பிடுகையில் சிறந்த வருமானத்தை வழங்க முனைகிறது |
பதவிக்காலம் | 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை | 5 ஆண்டுகள் |
வருமானம் | உறுதியான வருமானம் | உறுதியற்ற வருமானம் |
முதலீடு செய்ய பொருத்தமானவர்கள் | குறுகிய கால மற்றும் நீண்ட கால முதலீட்டாளர்கள் | நீண்ட கால முதலீட்டாளர்கள் |
முதலீடு அல்லது சேமிப்பது என்பது நமது எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். ஆனால் நாம் எதில் முதலீடு செய்கின்றோம் என்பதும் மிகவும் முக்கியம். அதனால் அனைத்து முதலீட்டாளர்களும் தங்கள் முதலீடு செய்ய உள்ள முதலீடு முறையை பற்றி நன்கு ஆராய்ச்சி செய்த பிறகு முதலீடு செய்வது மிகவும் முக்கிய ஆகும்.
ஆர்.டி கணக்கு Vs சேமிப்பு கணக்கு இந்த இரண்டில் எதில் முதலீடு செய்வது நல்லது
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |