IDFC 5 Lakh Home Loan Interest Rate
IDFC வங்கி என்பது இந்திய தனியார் துறை வங்கி ஆகும். இது 1997 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான கடன்களும் சேமிப்பு திட்டங்களும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, IDFC வங்கியில் வழங்கப்படும் கடன்களில் ஒன்றான வீட்டு கடன் பற்றிய சில விவரங்களை எடுத்துக்காட்டுடன் இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.
அதாவது, 2024-ஆம் ஆண்டில் IDFC வங்கியில் 5 லட்சம் Home Loan வாங்கினால் அதற்கு எவ்வ்ளவு வட்டி கட்ட வேண்டும் என்றும் மற்றும் EMI எவ்வளவு கட்ட வேண்டும் என்பதையம் இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
IDFC Home Loan Details in Tamil:
வட்டி விகிதம்:
IDFC வங்கியில் வீட்டு கடனிற்கான வட்டி விகிதமாக 8.75% முதல் அளிக்கப்படுகிறது.
கால அளவு:
IDFC வங்கியில் வீட்டு கடனிற்கான கால அளவாக அதிகபட்சம் 30 வருடம் வரை அளிக்கப்படுகிறது. எனவே, நீங்கள் வாங்கும் வீட்டு கடன் தொகையை 30 வருடத்திற்குள் திருப்பிய செலுத்துதல் வேண்டும்.
கடன் தொகை:
IDFC வங்கியில் குறைந்தபட்சம் 1 லட்சம் முதல் அதிகபட்சம் 5 கோடி வரை வீட்டு கடன் வழங்கப்படுகிறது.
தகுதிகள்:
IDFC வங்கியில் குறைந்தபட்சம் 23 வயது முதல் அதிகபட்சம் 70 வயதுடைய நபர்கள் வீட்டு கடன் பெற்று கொள்ளலாம்.
அனைத்து இந்திய குடிமக்கள் அனைவரும் IDFC வங்கியில் வீட்டு கடன் வாங்க தகுதியானவர்கள் ஆவர்.
ஆண்டு வருமானம் 1 லட்சம் முதல் இருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு:
IDFC வங்கியில் நீங்கள் 3 வருட கால அளவை தேர்வு செய்து 5 லட்சம் வீட்டு கடன் பெறுகிறீர்கள் என்றால் அதற்கான வட்டி விகிதமாக 8.75% அளிக்கப்படுகிறது.
எனவே, இந்த வட்டி விகிதத்தை வைத்து கணக்கிடும்போது நீங்கள் மாத EMI ஆக 15,842 ரூபாய் செலுத்தி வர வேண்டும்.
இந்த 3 வருடத்தில் உங்களுக்கான மொத்த வட்டி தொகை 70,303 ரூபாய் ஆகும்.
எனவே, நீங்கள் வாங்கிய தொகை மற்றும் வட்டி தொகை சேர்த்து மொத்தமாக 5,70,303 ரூபாய் செலுத்த வேண்டும்.
குறிப்பு: நீங்கள் வாங்கும் கடன் தொகை மற்றும் வட்டியை பொறுத்து EMI தொகை மாறுபடும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |