IDFC வங்கியில் 3 லட்சம் வாங்கினால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா.?

Advertisement

IDFC Home Loan 3 Lakh Interest Rate in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும். அதாவது பள்ளி செல்லும் குழந்தையை கேட்டால் டாக்டர் ஆக போகிறேன், டீச்சர் ஆக போகிறேன் என்று கூறும். அதுவே காலேஜ் போகிறவர்களை கேட்டால் அரசு வேலைக்கு செல்ல வேண்டும்,IT கம்பெனிக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்று மாறுபட்ட ஆசைகள் இருக்கும். மேலும் வேலைக்கு செல்கிறவர்களை கேட்டால் சொந்தமாக வீடு கட்ட வேண்டும், நிலம் வாங்க வேண்டும் என்று ஆசைகள் இருக்கும். இந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்கு பணம் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. சொந்தமாக வீடு கட்ட வேண்டும் கனவிற்காக பணத்தை சேமித்து வைப்பார்கள். ஆனாலும் சேமித்து வைத்த பணத்தில் வீட்டை கட்ட முடியாது. அதனால் பணம் தேவைப்பட்டால் கடன் தான் வாங்குவோம். ஆனால் நீங்கள் வெளியில் பணத்தை வாங்கும் போது அதற்கான வட்டி தொகையானது அதிகமாக இருக்கும். அதனால் தான் வங்கிகள் பல வகையான கடன்களை வழங்குகின்றது. அதில் ஒன்று தான் வீட்டு கடன். இந்த வீட்டு கடனுக்கான வட்டி தொகையானது ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். அதனால் தான் இந்த பதிவில் IDFC வங்கியில் வீட்டு கடன் 3 லட்சம் வாங்கினால் வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

IDFC Home Loan 3 Lakh Interest Rate in Tamil

சம்பளம் வாங்குபவர்களுக்கான தகுதி:

IDFC வங்கியில் வீட்டு கடனை வாங்குவதற்கு 21 வயது முதல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.

3 வருடம் வேலையில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

வருடத்திற்கு 1 லட்சம் சம்பளம் வாங்குபவராக இருக்க வேண்டும்.

2 லட்சம் கோல்டு லோனுக்கு வட்டி 7.30% என்றால் EMI எவ்வளவு.?

சுயதொழில் செய்பவர்களுக்கான தகுதி:

DFC வங்கியில் வீட்டு கடனை வாங்குவதற்கு 23 வயது முதல் 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.

4 வருடம் தொழிலில் உள்ளவராக இருக்க வேண்டும்.

வருடத்திற்கு 1.5 லட்சம் வருமானம்  இருக்க வேண்டும்.

வட்டி:

வீட்டு கடனுக்கான வட்டி தொகையானது தோராயமாக 8.85% வட்டி வழங்கபடுகிறது.

EMI:

நீங்கள் வாங்கிய 3 லட்சம் வீட்டு கடனுக்கு மாதந்தோறும் EMI தொகையாக 6,206 ரூபாய் செலுத்த வேண்டும்.

5 வருடத்தில் வாங்கிய கடன் தொகைக்கு வட்டி தொகையாக 72,341 ரூபாய் செலுத்த வேண்டும்.

வாங்கிய கடன் தொகை மற்றும் வட்டி தொகை என சேர்த்து மொத்த தொகையாக 3,72,341 ரூபாய் செலுத்த வேண்டும்.

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement