2 லட்சம் கோல்டு லோனுக்கு EMI எவ்வளவு
நடுத்தர குடும்பத்தினர் தங்கம் வாங்குவதே கஷ்டமான சூழ்நிலையில் அடகு வைத்து பணத்தை பெறுவதற்கு தான். பெரும்பாலும் அவசரமாக பணத்தை வாங்குவதற்கு தனியாரின் வைக்கின்றனர். தனியாரில் நகையை அடகு வைத்தால் வட்டி அதிகமாக இருக்கும். நீங்க வாங்கிய கடன் தொகையை விட வட்டி தொகை அதிகமாகிவிடும். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் தான் வங்கிகள் பல வகையான கடன்களை வழங்குகின்றது. அதில் ஒன்று தான் நகை கடன். அந்த வகையில் இன்றைய பதிவில் SBI வங்கியில் 2 லட்சம் கோல்டு லோன் பெற்றால் வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு என்று அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
SBI வங்கியில் 2 லட்சம் நகை கடன் வாங்கினால் வட்டி மற்றும் அசல் தொகை:
வட்டி:
SBI வங்கியில் தங்க நகைக்கடனுக்கு தோராயமாக 7.30% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
அதிகபட்ச தொகை:
SBI வங்கியில் நகையை வைத்து அதிகபட்சம் 50 லட்சம் வரை நகைக்கடன் பெற்றுக்கொள்ளலாம்.
கடன் செலுத்தும் காலம்:
SBI வங்கியில் நீங்கள் பெற்ற நகைக்கடனை அதிகபட்சம் 3 வருடத்திற்குள் திருப்பி செலுத்துதல் வேண்டும்.
SBI வங்கியில் 2 லட்சம் நகைக்கடன் பெற்றால் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு.?
நீங்கள் SBI வங்கியில் வாங்கிய 2 லட்சம் நகை கடனுக்கு 3 வருடத்தில் 23,304ரூபாய் வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.
இதற்கு மாதந்தோறும் EMI தொகையாக 6,203 ரூபாய் செலுத்த வேண்டும். 3 வருடத்தில் 2 லட்சம் நகை கடன் மற்றும் வட்டி தொகை என சேர்த்து 2,23,304 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டியிருக்கும்.
குறிப்பு: நீங்கள் வாங்கும் கடன் தொகையை பொறுத்து வட்டி மற்றும் EMI தொகை மாறுபடும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |