இரும்பு பாத்திரத்தில் சமைக்கக் கூடாத பொருட்கள்

Advertisement

 Food Items That Should Not be Cooked in an Iron Pan 

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பாத்திரத்தில் சமைப்பார்கள். சில பேர் வீட்டில் சில்வர் பாத்திரத்தில் சமைப்பார்கள், சில பேர் வீட்டில் அலுமினியம் பாத்திரத்தில், மண் பாத்திரத்தில், நான்ஸ்டிக் பாத்திரம், இரும்பு பாத்திரம் என சமைப்பார்கள். சில நபர்கள் வீட்டில் எல்லா பாத்திரங்களும் வைத்திருப்பார்கள். அதில் ஒவ்வொரு உணவு சமைப்பதற்கு ஒவ்வொரு பாத்திரங்களை பயன்படுத்துவார்கள். அப்படி நீங்கள் சமைக்கும் பாத்திரமான இரும்பு பாத்திரத்தில் என்ன பொருட்களை சமைக்க கூடாது என்று அறிந்து கொள்வோம் வாங்க..

அமிலத்தன்மை நிறைந்தது:

அமிலத்தன்மை நிறைந்த உணவுகளான புளி, எலுமிச்சை, சிட்ரிக் ஆசிட் போன்றவற்றை சமைப்பதை தவிர்க்க வேண்டும். இந்த அமிலத்தன்மை நிறைந்த உணவுகளானது இரும்புடன் சேரும் போது பாத்திரமானது துருபிடிக்க ஆரம்பித்து விடும்.

கடல் உணவுகள்:

இரும்பு பாத்திரத்தில் சமைக்க கூடாத பொருட்கள் 

மீன் மற்றும் நண்டு, இறால் போன்ற கடல் உணவுகளை சமைக்க கூடாது. ஏனென்றால் இரும்பு ஆனது வெப்பத்தை நீண்ட நேரம் வைத்து கொள்ள கூடியது. இதனால் உணவுகள் பாத்திரத்தில் ஒட்டி கொள்ளும். இதனால் உணவின் சுவை மற்றும் நிறம் மாறி விடும்.

துவர்ப்பு தன்மை உணவுகள்:

துவர்ப்பு தன்மை வாய்ந்த பொருட்களை இரும்பு பாத்திரத்தில் சமைக்க கூடாது. எந்த விதமான ரச உணவுகளையும் சமைக்க கூடாது.

பச்சை காய்கறிகள்:

இரும்பு பாத்திரத்தில் சமைக்க கூடாத பொருட்கள் 

பச்சை  காய்கறிகளை இரும்பு பாத்திரத்தில் சமைக்க கூடாது. ஏனென்றால் இதனின் நிறம் கருப்பாக மாறிவிடும். இவை உடல் ஆரோக்கியத்திற்கு தீமையை ஏற்படுத்த கூடிய ஒன்றாக இருக்கிறது.

இரும்பு பாத்திரத்தில் எத்தனை தடவை சமைக்கலாம்:

இரும்பு பாத்திரத்தில் சமைக்கின்ற உணவானது உடலுக்கு ஆரோக்கியம் என்பதற்காக அதில் தினமும் சமைக்க கூடாது. வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் தான் இரும்பு பாத்திரத்தில் உணவை சமைக்க வேண்டும்.

இரும்பு பாத்திரத்தை பயன்படுத்திய பிறகு அதனை கழுவிய பிறகு காட்டன் துணியை பயன்படுத்தி ஈரத்தை துடைக்க வேண்டும். அதன் பிறகு இதில் தேங்காய் எண்ணெயை தடவி வேண்டும். இதன் மூலம் பாத்திரமானது துரு பிடிக்காமல் இருக்கும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil

Advertisement