Vendakkai Vadai
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வெண்டைக்காய் வடை செய்வது எப்படி.? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. வெண்டைக்காய் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வேண்டாம் என்று தான் கூறுவார்கள். அந்த அளவிற்கு வெண்டைக்காய் யாருக்கும் பிடிக்காது. இதன் வழவழப்பு தன்மை காரணமாக யாரும் இதனை சாப்பிட மறுக்கிறார்கள். ஆனால், இந்த வெண்டைக்காயில் வடை செய்து கொடுத்தால் நல்லா சாப்பிடுவார்கள்.
வடை என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதனால் வெண்டைக்காயை வைத்து மொறுமொறுவென்று வடை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். ஆகையால், இந்த பதவியின் வாயிலாக வெண்டைக்காய் வடை செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.
வெண்டைக்காய் செடி வேகமாக வளர்ந்து அதிக காய்கள் காய்க்க இதை ட்ரை பண்ணுங்க..!
வெண்டைக்காய் வடை செய்வது எப்படி.?
Ingredients
- கடலை பருப்பு - 1/2 கப்
- வெண்டைக்காய் - 10
- சோம்பு - 1 ஸ்பூன்
- கிராம்பு - 2
- பட்டை - ஒரு சிறிய துண்டு
- பூண்டு - 4 பற்கள்
- உப்பு - 1/2 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 2
- கருவேப்பிலை - 3 கொத்து
- பட்டை மிளகாய் - 4
Instructions
Vendakkai Vadai Recipe in Tamil:
முதலில், வெண்டைக்காயை நன்கு கழுவி பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள்.
அடுத்து, கடலை பருப்பை ஒன்றிற்கு இரண்டு முறை கழுவி, 10 நிமிடம் வரை ஊறவைத்து எடுத்து கொள்ளுங்கள்.
இப்போது, ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு, பட்டை, கிராம்பு, பட்டை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரையுங்கள். இதனுடன் ஊறவித்துள்ள கடலை பருப்பு சேர்த்து 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
பருப்பு வடை பதத்திற்கு மாவை அரைத்து எடுத்து கொள்ளுங்கள். அதன் பிறகு இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
2 அல்லது 3 நிமிடம் கழித்து வடையாக தட்டி கொள்ளுங்கள். பின்பு, அடுப்பில் ஒரு வானலை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் வடையை போட்டு இருபுறமும் சிவரவிட்டு எடுத்தால் சுவையான வெண்டைக்காய் வடை தயார்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |