Watermelon Milkshake Recipe in Tamil
இந்த வெயிலுக்கு உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்வதற்கு என்ன பழங்கள் எடுத்து கொள்ள வேண்டுமோ அதை தான் எடுத்து கொள்வோம். அந்த வகையில் இந்த வெயிலுக்கு தர்பூசணி பழமானது போட இடங்கள் அனைத்திலும் விற்க கூடிய ஒன்றாக இருக்கிறது. இதனை பார்த்தாலே வாங்கி வந்து விடுவோம்.
சில நபர்களுக்கு இந்த பழம் பிடிக்காமல் கூட இருக்கும். அப்படி பிடிக்காமல் இருப்பவர்களுக்கு இந்த பதிவில் கூறியுள்ள ரெசிபி மாதிரி செய்து கொடுத்தால் நிச்சயம் சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் தர்பூசணி மில்க் ஷேக் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
தர்பூசணி மில்க் ஷேக் செய்வது எப்படி.?
Ingredients
- தர்பூசணி பழம்- 1/2 கப்
- சீனி- 3 தேக்கரண்டி
- பால்- 1/2 லிட்டர்
- பாதாம் பிசின்- சிறிதளவு
Instructions
How to Make Watermelon Milkshake in Tamil
முதலில் தர்பூசணி பழத்தை எடுத்து அதன் உள்பகுதியில் இருக்கும் சதையை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். இதனை சிறிய சிறிய துண்டுகளாக கட் செய்து எடுத்து கொள்ள வேண்டும்.
கட் செய்து வைத்துள்ள தர்பூசணி பழத்தை மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். இதனுடன் காய்ச்சு வைத்த 1/2 லிட்டர் பாலையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு இதனுடன் சீனி, தேன், ஒரு சொட்டு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். இதனை ஒரு கிளாசில் சேர்த்து கொள்ள வேண்டும். பின் இதில் பாதாம் பிசினை முதல் நாள் இரவே ஊற வைத்து கொள்ளுங்கள்.
இதனுடன் ஐஸ் கட்டி, பாதாம் பிசின் சேர்த்து 1 மணி நேரம் வைத்து விடுங்கள். அதன் பிறகு இதனை எடுத்து குடித்தால் அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த வெயிலுக்கு உங்களின் உடம்பை குளுமையாக வைத்து கொள்ள உதவும் எல்லா வகையான ரெசிபியும் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் வாரத்தில் 3 நாட்கள் இதனை குடியுங்கள்.
குறிப்பு: சளி பிரச்சனை, நுரையீரல் பிரச்சனை, சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் இந்த மில்க் ஷேக் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இவை குளுமை நிறைந்தது. இதை பருகும் போது உங்களின் பிரச்சனையை அதிகப்படுத்தும்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |