Ripe Banana Recipe in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சூப்பரான ஒரு ரெசிபி பற்றி பார்க்கலாம் வாங்க. அனைவரது வீட்டிலும் வாழைப்பழம் என்பது இருக்கும். அந்த வாழைப்பழம் கொஞ்சம் கூடுதலாக பழுத்து போய்விட்டது என்றால் அதனை யாருமே சாப்பிட மாட்டார்கள். இதனால், வாழைப்பழம் வீணாகிவிடும். அப்படி இருக்கும் பட்சத்தில், பழுத்த வாழைப்பழத்தில் ஒரு அருமையான இனிப்பான ரெசிபி செய்யலாம். அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.
வீட்டில் குழந்தைகள் ஸ்நாக்ஸ் கேட்கும்போது, ரெசிபியை செய்து கொடுங்கள். வாழைப்பழத்தில் அதிக சத்துக்கள் உள்ளது. அதனால், வாழைப்பழம் சாப்பிடாத குழந்தைக்களுக்கு, வாழைப்பழத்தில் இந்த மாதிரி ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
உலகிலேயே மிகப்பெரிய வாழைப்பழம் எங்கு வளர்கிறது தெரியுமா…?
Ripe Banana Recipe in Tamil
Ingredients
- பழுத்த வாழைப்பழம் - 5
- கோதுமை மாவு- 1 கப்
- நாட்டு சர்க்கரை - 1/2 கப்
- பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
- ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
Instructions
Ripe Banana Snack Recipes in Tamil:
- முதலில், 5 அல்லது 6 பழுத்த வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இதன் தோலை நீக்கிவிட்டு சதை பகுதியினை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.
- இப்போது, ஒரு மிக்ஸி ஜாரினை எடுத்து, அதில் வாழைப்பழத்தை சிறிது சிறிதாக நறுக்கி போட்டு கொள்ளுங்கள். இதனுடன், நாட்டு சர்க்கரை சேர்த்து மைய அரைத்து எடுத்து கொள்ளுங்கள். மிக்ஸியில் போட்டும் அரைத்து எடுத்துக் கொள்ளலாம் அல்லது கரண்டி வைத்தும் நன்கு கலந்தும் கொள்ளலாம்.
- அடுத்து, ஒரு பெரிய அகலமான பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். இந்த பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள வாழைப்பழ பேஸ்டினை சேர்த்து கொள்ளுங்கள். இதனுடன், கோதுமை மாவு, பேக்கிங் சோடா மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
- இதனை, 5 நிமிடம் வரை அப்படியே வைத்து விட்டு, அதன் பிறகு, அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள்.
- எண்ணெய் சூடானதும் அதில், தயார் செய்து வைத்துள்ள மாவினை கையால் எடுத்து சிறிது சிறிதாக உருண்டையாக போட்டு இருபுறமும் திருப்பி விட்டு நன்கு சிவரவிட்டு எடுத்தால் சுவையான வாழைப்பழம் ஸ்னாக்ஸ் ரெடி..!
எப்போதும் வாழைப்பழம் கெட்டு போகாமல் பிரஷா இருக்க இதை செய்யுங்க..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |