Beetroot Rasam Recipe in Tamil
காய்கறிகளில் நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளது. ஆனால் நாம் தான் காய்கறிகளை சாப்பிடுவதில்லை. பிடித்த காய்கறியை விட பிடிக்காத காய்கறிகள் தான் அதிகம் இருக்கின்றது. அப்படி பிடிக்காத ஒரு உணவுப்பொருள் என்றால் அது பீட்ரூட் தான். ஆனால் இந்த பீட்ரூட்டில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் இந்த பீட்ரூட்டை உங்களின் குழந்தைகளுக்கு அளிக்கும் பொழுது அவர்களுக்கு அது பீட்ரூட் என்றே தெரியக்கூடாது. அப்பொழுது தான் அவர்கள் அதனை சாப்பிடுவார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் பீட்ரூட் ரசம் வைப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
பீட்ரூட் ரசம் செய்ய தேவையான பொருட்கள்:
பீட்ரூட் =1
மிளகு =அரை தேக்கரண்டி
சீரகம் =1 தேக்கரண்டி
சோம்பு =1 தேக்கரண்டி
பூண்டு =10 பள்ளு
எண்ணெய் =3 தேக்கரண்டி
புளி =எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் =அரை தேக்கரண்டி
தக்காளி =2
காய்த்த மிளகாய் =1
பச்சை மிளகாய் =2
கொத்தமல்லி இலை ,கருவேப்பிலை =சிறிதளவு
பீட்ரூட் ரசம் செய்முறை:
பீட்ரூட் டின் தோலை நீக்கி விட்டு சின்னதாக நறுக்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு இதனை மிக்ஸியில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். பிறகு இதிலிருந்து சாற்றை மட்டும் எடுத்து வடிக்கட்டி கொள்ள வேண்டும்.
பிறகு சீரகம் ,மிளகு, சோம்பு, காய்ந்த மிளகாய் எல்லாம் மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். இதனுடன் பூண்டு சேர்த்து லேசாக அரைத்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்துஅவை பொரிந்ததும் கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும். அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதுகளையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி விடவும்.
பீட்ரூட் பிடிக்காதவர்களுக்கு கூட இப்படி செய்து கொடுத்தால் வேண்டாம் என்றே சொல்ல மாட்டார்கள்
அதன் பிறகு சிறிதளவு மஞ்சள் தூள், புளி கரைசல் மற்றும் வடிக்கட்டி வைத்த பீட்ரூட் சாற்றையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். இதனுட தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். ஒரு கொதி கொதித்து நுரை வந்தான் பிறகு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கி விட வேண்டும்.
ஒருமுறை செய்து பாருங்க, மறுபடியும் மறுபடியும் செய்யும் சொல்லி கேட்பார்கள். அவ்வளவு ருசியாக இருக்கும்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |