பீட்ரூட் பொரியல் செய்வது எப்படி.?
காய்கறிகளில் நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளது. ஆனால் நாம் தான் காய்கறிகளை சாப்பிடுவதில்லை. பிடித்த காய்கறியை விட பிடிக்காத காய்கறிகள் தான் அதிகம் இருக்கின்றது. அதில் ஒன்று தான் பீட்ரூட் இதை எப்படி செய்து கொடுத்தாலும் சாப்பிட மாட்டார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் பீட்ரூட்டை வைத்து ஒரு பொரியல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம். இந்த பதிவில் கூறியுள்ளது போல் பீட்ரூட் பொரியல் செய்து கொடுங்க வேண்டாம் என்றே சொல்ல மாட்டார்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பீட்ரூட் பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:
- பீட்ரூட்-1
- எண்ணெய்- 2 தேக்கரண்டி
- கடுகு- 1 தேக்கரண்டி
- சின்ன வெங்காயம்-10
- பூண்டு- 10 பற்கள்
- காய்ந்த மிளகாய்- 4
- மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
- தேங்காய்- 1 கப்
- கருவேப்பிலை- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
பீட்ரூட்ல பக்கோடாவா..! ஆச்சரியமா இருக்கா செஞ்சு சாப்பிட்டு பார்க்கலாம் வாங்க..!
பீட்ரூட் பொரியல் செய்முறை:
முதலில் ஒரு பீட்ரூட்டை எடுத்து சிறியதாக நறுக்கி கொள்ளவும். இதனை பாத்திரத்தில் சேர்த்து வேகின்ற அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். இதனுடன் தேவையான அளவு உப்பு. சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும்.
பீட்ரூட் வேகின்ற இடைவெளியில் ஒரு 10 சின்ன வெங்காயம், 5 பற்கள் பூண்டு, 4 பட்டை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். முக்கியமாக தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கொள்ளவும். பிறகு பாதி தேங்காய் மூடி எடுத்து துருவி எடுத்து கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் கடாய் வைத்து அதில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, 1 தேக்கரண்டி கடுகு சேர்த்து கொள்ளவும். கடுகு பொரிந்ததும் கருவேப்பிலை ஒரு கொத்து, அரைத்து வைத்த மசாலாவையும் சேர்த்து வதக்கி கொள்ளவும். பின் இதில் பீட்ரூட்டையும் சேர்த்து 2 நிமிடத்திற்கு வதக்கி விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
ஒரு முறை சோயா பெப்பர் பிரை இப்படி செஞ்சு பாருங்க
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |