பால்வாடி சத்துமாவை வைத்து சுவையான கேக் செய்யலாம்..!

Advertisement

Sathu Maavu Cake Seivathu Eppadi

எல்லோருக்குமே சத்துமாவுனாலே நியாபகம் வரது பால்வாடி தான். நம்மளோட சின்ன வயசுல பால்வாடி போயிருப்போம் அங்க சத்துமாவுனால நமக்கு கொழுக்கட்டை, உருண்டைலாம் செஞ்சிகொடுத்துருப்பாங்க. அது உடம்புக்கு ரொம்ப நல்லது. அப்படிப்பட்ட இந்த சத்து மாவை வைத்து வீட்டிலே சுவையான கேக் செய்யலாம் தெரியுமா? ஆச்சரியமா இருக்குல்ல .. உண்மையாதான் எளிமையா உங்க சுற்றுப்புற பால்வாடியில கிடைக்கிற சத்துமாவை வைத்து சூப்பரா ஒரு கேக் செய்யலாம். அது எப்படினு பார்ப்போம் வாங்க.

சத்துமாவு  கேக் செய்ய தேவையான பொருட்கள் :

  • சத்துமாவு – 2 கப்
  • ஜீனி – 1/4 கிலோ
  • ஏலக்காய் – 3
  • முட்டை – 2
  • ஆயில் – 3 டேபிள் ஸ்பூன்
  • சமையல் சோடா – 3/4 டேபிள் ஸ்பூன்
  • பால் – 1 கப்

சத்துமாவு  கேக் செய்முறை :

  • உங்க ஊருல இருக்க பால்வாடியில ஒரு சத்து மாவு பாக்கெட் கேட்டு வாங்கிக்கோங்க. அப்படி பால்வாடி சத்துமாவு கிடைக்காதவுங்க உங்க கடையில வாங்கி கூட சத்துமாவு  கேக் செய்யலாம்.
  • மிக்சி ஜாரில் சத்துமாவு, ஜீனி , ஏலக்காய் போட்டு முதலில் அரைத்து கொள்ளுங்கள். ஏலக்காய் பிடிக்காதவுங்க வெண்ணிலா எசன்ஸ் கூட சேர்த்துக்கலாம்.
  • அரைத்த பிறகு , முட்டை அதில் ஒடச்சி ஊத்திக்கோங்க. முட்டை பிடிக்காது அப்ப்டிங்கிறவுங்க 1/4 கப் அளவு தயிர் சேர்த்துக்கலாம். முட்டை சேர்க்கும்போது கேக் நல்லா ப்ளம்பியா வரும்.
  • அப்படியே ஆயுளையும் சேர்த்துக்கோங்க ரீபாய்ன்ட் ஆயில் அல்லது சன் ப்ளவர் ஆயில் கூட சேர்த்துக்கலாம். இப்போ இதோட சமையல் சோடா சேர்த்துக்கோங்க. இப்போ எடுத்து வச்சிருக்க ஒரு கப் பாலையும் சேர்த்துடாதீங்க பாதி கப் மட்டும் சேர்த்துக்கோங்க. மிச்ச பாலை தேவைப்படும்போது சேர்த்துக்கலாம்.
  • இப்போ இது எல்லாத்தையும் மிக்சியில் 2 முறை அரைத்துக்கோங்க. இப்போ மாவு பதத்திற்கு வந்துருக்கும். ஸ்பூனால கலந்து பாருங்க ரொம்ப கெட்டியா இருந்துச்சின்னா. மிச்சம் எடுத்துவச்ச பாலுல 1/4 கப் சேர்த்து மிக்ஸ் பண்ணுங்க. இப்போ ஓரளவுக்கு சரியான பதத்துக்கு வந்துருக்கும்.
  • இப்போ கேக் செய்வதர்க்கு ஏதாவது ஒரு பாத்திரத்தை எடுத்துக்கோங்க சில்வர் பாத்திரமா இருந்தாலும் சரி அலுமினிய பாத்திரமாம இருந்தாலும் சரி. ரவுண்ட் சேப்ள எடுத்துக்கோங்க. இப்போ அந்த பாத்திரத்துல எண்ணெய் எல்லாப்பக்கட்டும் லைட்டா தேச்சிக்கோங்க.
  • ஆயில் தடவிய பாத்திரத்துல மைதா மாவு லைட்டா பரவி விட்டுக்கோங்க. கேக் ஒட்டாம வரத்துக்காகத்தான். மைதா மாவு இல்லனா கோதுமை மாவு கூட பயன்ப்படுத்திக்கோங்க.
  • இப்போ அந்த பாத்திரத்துல அடிச்சி வச்சிருக்க கேக் கலவையை பாத்திரத்தின் பாதியளவு இருக்குற மாறி ஊத்திக்கோங்க. இப்போ பாத்திரத்தை நல்லா மேலையும் கீழையும் எடுத்து எடுத்து வையுங்க அப்போதான் கேக் பெட்டர் எல்லாப்பக்கட்டும் பரவும்.
  • கேக்க கடையிலதான் செய்ய போறோம் குக்கர் மற்றும் ஓவன் இல்லாமலே  நம்ப செய்யலாம். இப்போ அடுப்புல  கடாய வைத்து 10 நிமிசத்துக்கு சூடு பன்னிட்டு அதுல  கேக் ஸ்டான்ட் கேக் பெட்டர் பாத்திரத்தை வைக்கிற மாரி வைச்சிக்கோங்க. அந்த ஸ்டாண்ட் மேல கேக் பாத்திரத்தை வைச்சிக்கோங்க. கடாயை ஒரு தட்டால மூடிக்கோங்க. அதுமேல கனமான பொருளை வச்சிக்கோங்க அப்போதான் காத்து உள்ள போகாது. தோசை கல்லை கூட வச்சிக்கலாம்.
  • கேக் ரெடியாகிவர 1 மணி நேரம் ஆகும். 15 நிமிசத்துக்கு பிறகு ஓபன் பண்ணி பொடியா கட் பண்ண முந்திரி, பாதம் சேர்த்துக்கோங்க. உங்க கிட்ட என்ன நட்ஸ் இருக்கோ அதை சேர்த்துக்கோங்க. இப்போ போட்டுதான் நட்ஸ் மேலே நிற்கும். முன்னாடியே போட்ட கேக் உள்ள நட்ஸ் போய்டும்.
  • இப்போ மறுபடியும் மூடி வச்சிட்டு 45 நிமிஷம் கழிச்சி எடுத்து பாருங்க. கேக் சூப்பரா ப்ளம்பியா வந்துருக்கும். ஒரு கத்தி இல்லைனா ஸ்பூன் கேக் உள்ள விட்டு பாருங்க கேக் ஒட்டாம வருதான்னு. அப்படி ஒட்டுன்னிச்சினா இன்னும் 10 நிமிசத்துக்கு கூட வேக விட்டுக்கோங்க. 10 நிமிஷம் சேர்த்து வக்கிரவுங்க அடுப்பை சிம்ல வச்சிக்கோங்க அடிபுடிச்சிர கூடாது அதுக்குதான்.
  • இப்போ கேக் நல்லா வந்ததுக்கு அப்புறம் பாத்திரத்தை வெளியில் எடுத்து ஆறவிடுங்க. ஆறுனதுக்கப்றம் காத்தியால கேக்க சுற்றிலும் கீறி விடுங்க அப்போதான் சீக்கிரமா கேக் தட்டும்போது வெளியே வந்துடும்.
  • இப்போ கீழே ஒரு தட்டை வைத்து கேக் பாத்திரத்தை லைட்டா தட்டுனீங்கனா கேக் ஒட்டாம அழகா ரவுண்ட் ஷேப்பில் வந்துடும்.
  • இப்போ சத்துமாவில் செய்த கேக் தயார் .இதை உங்க குழந்தைங்களுக்கு விடுமுறை தினத்திலெலாம் செஞ்சிகொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவாங்க .

 

ஓவன் இல்லாமலே 1/2 கிலோ சாக்லேட் கேக் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil

 

Advertisement