ஓவன் இல்லாமலே 1/2 கிலோ சாக்லேட் கேக் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை

Advertisement

1/2 kg chocolate cake recipe ingredients

வருகின்ற திங்கட்கிழமை ஆங்கில புத்தாண்டு வருகிறது, அதனால் இந்த பதிவை படித்து கொண்டிருக்கும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், நீங்கள் நினைத்திருக்கின்ற காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடிவடைய வாழ்துகிறேன்.

இந்த புத்தாண்ற்கு எதை செய்கிறமோ இல்லையோ கண்டிப்பாக இரவு 12 மணிக்கு கேக் வெட்டுவோம். ஆனால் இந்த கேக்கினை பெரும்பாலும் கடையில் தான் வாங்குகிறரர்கள். வீட்டில் செய்ய தெரிந்தாலும் அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன தேவைப்படும் என்பது தெரியவில்லை. அதனால் தான் இந்த பதிவில் 1/2 கிலோ கேக் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை பற்றி அறிந்து கொள்வோம்.

சாக்லேட் கேக் செய்ய தேவையான பொருட்கள்:

மைதா மாவு- 1/4 கப்

கோகோ பவுடர்- 1 1/2 தேக்கரண்டி

பேக்கிங் சோடா- 1/2 தேக்கரண்டி

முட்டை- 2

வெண்ணிலா எஸ்சென்ஸ் – 1 தேக்கரண்டி

சுகர்-1 /2 கப்

ஆயில்- 1 தேக்கரண்டி

கேக் டின்- 6 இன்ச்

செய்முறை:

முதலில் ஒரு பவுலில் மாவு 1/3 கப், கோகோ பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். அடுத்து இன்னொரு பவுல் எடுத்து அதில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி கொள்ளவும். அதிலேயே வெண்ணிலா எஸென்ஸ் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் இதனுடன் சுகர் பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக  சேர்த்துய் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

இவை கெட்டி பதம் வந்த பிறகு ஆயில் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் நாம் மிக்ஸ் செய்து வைத்துள்ள கோகோ பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும். இதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து 5 நிமிடம் சூடுபடுத்த வேண்டும். அதன் பிறகு வேறொரு பாத்திரத்தில் சேர்த்து குறைந்த தீயிலே மூடி போட்டு 30 அல்லது 35 நிமிடம் வேக வைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு தட்டில் சேர்த்தால் சாக்லேட் கேக் ரெடி.!

7 நபருக்கு வீட்டிலேயே ஆப்பம் செய்ய தேவைப்படும் பொருட்களின் அளவு எவ்வளவு..?

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement
Advertisement