1 பவுண்ட் என்பது எத்தனை கிலோ தெரியுமா.?

Advertisement

1 Pound is How Many Kg

வணக்கம் நண்பர்களே.நம் பொதுநலம் பதிவின் வாயிலாக பல்வேறு பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில், இப்பதிவில் 1 பவுண்ட் என்பது எத்தனை கிலோ என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க. நம்மில் பெரும்பாலனவர்களுக்கு கணக்கு என்றாலே பிடிக்காது. பிடிக்காது என்று சொல்வதை விட வராது என்றே சொல்லலாம். மற்ற பாடங்களை விட கணிதம் பாடத்தில் சற்று குறைவாகவே மதிப்பெண் எடுத்து இருப்போம். அப்படி கணக்கு வகைகளில் வரக்கூடியது தான் அளவுகளும். அளவுகள் என்றாலே நம்மில் பலபேருக்கு குழப்பம் இருக்கும்.

அளவுகளில் பவுண்ட் என்பதை நாம் அனைவருமே அறிந்து இருப்போம். 1 பவுண்ட் என்பது  எத்தனை கிலோ என்பது தெரியாமல் இருக்கலாம். எனவே, அதனை தெரிந்துக்கொள்ளும் விதமாக இப்பதிவில் 1 பவுண்ட் என்பது எத்தனை கிலோ என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.

பவுண்ட் என்றால் என்ன.?

ஒரு பவுண்டு என்பது ஒரு பொருளின் நிறை அல்லது பொருளின் அளவைக் குறிக்கும் அளவீட்டு அலகு ஆகும். பவுண்டுகள் lb அல்லது lbs என்று குறிப்பிடப்படுகிறது. “Ib” என்பது அளவை குறிக்கும் எழுத்தாகும். ஒரு பவுண்டு என்பது அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் ஒரு பொதுவான சொல் ஆகும்.

பவுண்டுகள் மற்றும் கிலோகிராம் இரண்டும் வெவ்வேறு அளவுகள். கிலோகிராம் என்பது Kg என சுருக்கப்படுகிறது. பவுண்டானது ‘Ib’ மற்றும் ‘Ibm’ என சுருக்கப்படுகிறது. ஒரு கிலோகிராம் என்பது நிறை அல்லது திடமான இயற்பியல் அளவை அளவிடுவதற்கான ஒரு மெட்ரிக் அலகு ஆகும்.  மறுபுறம், ஒரு பவுண்டு என்பது நிறை அல்லது திடமான இயற்பியல் அளவை அளவிடுவதற்கான ஒரு ஏகாதிபத்திய அலகு ஆகும்.

1 பவுண்டு என்பது எத்தனை கிலோ.?

ஒரு பவுண்டு என்பது 0.4535 கிலோகிராம் ஆகும். அதேபோல்,  ஒரு கிலோ என்பது 2.2046 பவுண்டுக்கு சமம் ஆகும். மேலும், 1 பவுண்டுக்கு சமமான அளவுகள் கிலோகிராமில் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

பவுண்டு  கிலோகிராம் 
0.01 பவுண்ட் 0.00453 கிலோ
0.1 பவுண்ட் 0.04535 கிலோ
1 பவுண்ட் 0.45359 கிலோ
2 பவுண்ட் 0.90718 கிலோ
3 பவுண்ட் 1.36077 கிலோ
4 பவுண்ட் 1.81436 கிலோ
5 பவுண்ட் 2.26796 கிலோ
6 பவுண்ட் 2.72155 கிலோ
7 பவுண்ட் 3.17514 கிலோ
8 பவுண்ட் 3.62873 கிலோ
9 பவுண்ட் 4.08233 கிலோ
10 பவுண்ட் 4.53592 கிலோ
20 பவுண்ட் 9.07184 கிலோ
50 பவுண்ட் 22.6796 கிலோ
100 பவுண்ட் 45.3592 கிலோ
1000 பவுண்ட் 453.5923 கிலோ
தொடர்புடைய பதிவுகள் 
ஒரு மைல் என்பது எத்தனை கிலோமீட்டர் என்று தெரியுமா..?
1 ஏக்கர் என்பது எத்தனை சென்ட் என்று தெரியுமா..?
1 கிலோ மீட்டர் அளவுகள்
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement
Advertisement