How Many Kilometers is One Mile in Tamil
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் அளவுகள் பகுதியில் இன்று நாம் பார்க்க இருப்பது ஒரு மைல் என்பது எத்தனை கிலோமீட்டர் என்பதைத்தான். நம்மில் பெரும்பாலோனோர் மைல் என்று கூறுகிறார்களே அப்படி என்றால் எவ்வளவு தூரம் என்று யோசித்து இருப்போம். பொதுவாக பெரும்பாலும் பெரியவர்கள் தான் மைல் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துவார்கள். அக்காலத்தில் மைல் போன்ற பல வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆனால் அவற்றின் அளவுகள் பற்றி நமக்கு தெரியாது. இப்போதெல்லாம் நாம் பயணிக்கும் போது எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை அறிவதில்லை நேரத்தை மட்டுமே கணக்கில் கொண்டு பயணிக்கிறோம். ஆனால் அக்காலத்தில் உள்ள மக்கள் பயணிக்கும் போது இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பதை அளவோடு சொல்வார்கள். எனவே அந்த வகையில் இப்பதிவின் மூலம் 1 மைல் என்பது எத்தனை கிலோமீட்டர் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
ஒரு மைல் என்பது எத்தனை கிலோமீட்டர்.?
பிரித்தானிய அளவை முறையில் நீண்ட அலகுகளை அளக்க பயன்படும் அலகு மைல் ஆகும். இந்த வார்த்தையை ரோமானியர்கள் கண்டுபிடித்தனர். ஒரு மைல் என்பது 1.6 கிலோமீட்டருக்கு சமமானது.பண்டைய அரபியர்களும் தூரத்தை அளக்க மைல் என்பதை பயன்படுத்தினர். இது பிரித்தானிய அளவை முறைக்கு முற்பட்ட ஒன்றாகும். மைல் அளவு முகமது நபியவர்களின் காலத்திலும் அதற்கு முற்பட்ட காலத்திலும் பயன்பாட்டில் இருந்தது. தற்கால வரலாற்றாளர்களால் “அரபு மைல்” என்று அழைக்கப்படும் அலகு 1900 முதல் 2000 மீட்டருக்கு சமமானதாக இருந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர அடி
1 மைல் என்பதற்கு சமமான அலகுகள்:
- 1.609344 கிமீ
- 1609.344 மீ
- 63360 அங்குலம்
- 1609344 மிமீ
- 160934.4 செ.மீ
- 5280 அடி
- 1760 கெஜம்
ஒரு ஏக்கர் என்பது எத்தனை சதுர அடி?
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |