Valga Valamudan in Tamil
பொதுவாக பெரியவர்கள் சில நேரங்களில் வாழ்க வளமுடன் என்ற வார்த்தையை உச்சரிப்பதை பார்த்திருப்போம். அப்படி சொல்லும் போது நாம் அவர்கள் நம்மை ஆசிர்வதிக்கிறார்கள் என்று நினைப்போம். ஆனால், அந்த வாழ்க வளமுடன் என்ற வார்த்தையை உண்மையாகவே ஏன் சொல்கிறார்கள் என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் இந்த பதிவின் வாயிலாக பெரியவர்கள் வாழ்க வளமுடன் என்று சொல்வதற்கு காரணம் என்ன என்று பார்க்கலாம் வாங்க..!
“ஓம் நமசிவாய” என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா
வாழ்க வளமுடன் சொல்ல காரணம் என்ன..?
பொதுவாக வாழ்க வளமுடன் என்பது பெரியவர்களின் மந்திர சொல்லாக இருக்கிறது. இந்த் வாழ்க வளமுடன் என்ற மந்திர சொல்லை அறிமுகப்படுத்தியவர் தான் வேதாத்திரி மகரிஷி. அதுபோல வாழ்க வளமுடன் என்று கூறுவதும் ஒரு வித பிரார்த்தனை தான் என்று வேதாத்திரி மகரிஷி கூறியுள்ளார்.
இந்த வாழ்க வளமுடன் என்று சொல்லக்கூடிய மந்திரத்தில் வரக்கூடிய வாழ்க என்பது “வாழ்த்துச் சொல்” என்று சொல்லப்படுகிறது. மேலும் வளமுடன் என்பது ஒரு “நிறைவுத் தன்மையைக்” குறிக்கிறது.
பொதுவாக ஒரு மனிதன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு ஐந்து தேவைகள் முக்கியமானதாக இருக்கிறது. அவை,
- உடல் நலம்
- நீண்ட ஆயுள்
- நிறைந்த செல்வம்
- உயர்புகழ்
- மெய்ஞானம்
இதுபோன்ற ஐந்தையும் உணர்ந்து அனுபவித்து கடந்து வாழும் வாழ்க்கை தான் மனிதனின் முழுமையான வாழ்க்கை என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், மனிதனின் எல்லா இன்பங்களும் இந்த ஐந்தில் அடங்கி விடும்.
ஆகவே ஒருவர் வாழ்க வளமுடன் என்று உச்சரித்து வாழ்த்தும் போது, நீங்கள் இந்த ஐந்து செல்வங்களையும் பெற்று வாழுங்கள் என்று வாழ்த்துகிறார்.
அதாவது வாழ்க வளமுடன் என்று ஒருவர் வாழ்த்தினால் நிறைவுத் தன்மையுடன் இந்த இந்து செல்வங்களையும் பெற்று வாழ்க என்று ஒருவர் வாழ்த்துகிறார் என்று அர்த்தம் ஆகும்.
ஸ்ரீராம ஜெயம் என்பதன் தமிழ் அர்த்தம்
வாழ்க வளமுடன் சொல்ல அறிவியல் காரணம் என்ன..?
இந்த வாழ்க வளமுடன் என்று சொல்வதற்கு பின் ஒரு அறிவியல் காரணமும் இருக்கிறது.
அதாவது நீங்கள் வாழ்க வளமுடன் என்று சொல்லும் போது உங்களின் உள் நாக்கு அதாவது தொண்டையின் உள் மேல் பகுதியில் “ழ்” என்று சொல்லும் போது ஒரு அழுத்தம் நிகழ்வதை நம் அனைவராலும் உணர முடியும்.
அப்படி உள்நாக்கின் உச்சியில் அதாவது நெற்றிக்கும், பின் மண்டையில் உள்ள பிடறிக் கண்ணுக்கும் நேர் கோட்டில் ஒரு சூட்சுமம் (சுரப்பி) ஒளிந்துள்ளது.
அந்த சுரப்பியானது இந்த பிரபஞ்சத்தோடு நேரடியாக தொடர்பு கொண்டிருக்கும் சக்தியை பெற்றுள்ளது. அந்த சுரப்பியானது உங்களின் எண்ணங்களில் எழும் தேவைகளை பிரபஞ்சத்தில் கட்டளையாக மாற்றி அதனை பெற்று தருகிறது.
அப்படி நாம் வாழ்க வளமுடன் என்று உச்சரிக்கும் போது அந்த சுரப்பியானது கட்டளைகளை இந்த பிரபஞ்சத்திற்கு அனுப்பிக்கொண்டே இருக்கும்.
இப்படி ஒருவர் உங்களை வாழ்க வளமுடன் என்று வாழ்த்தும் போது, நீங்கள் வளமுடன் வாழ கட்டளைகளை அவர் பிரபஞ்சத்திற்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறார் என்று அர்த்தமாம்.
ஆகவே வாழ்க வளமுடன் என்பது வெறும் வாழ்த்து சொல் மட்டும் அல்ல. அது ஒரு அற்புதமான மந்திர சொல்லும் ஆகும்.
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Interesting information |