Whatsapp Encryption Meaning in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Whatsapp Encryption பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. நாம் அனைவருமே Whatsapp Encryption பற்றி அறிந்து இருப்போம். ஆனால், அதனை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் வாட்ஸாப்ப் Encryption என்றால் என்ன.? இதனை ஏன் மத்திய அரசு தடை செய்ய சொல்கிறது என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
Whatsapp Encryption என்றால் என்ன.? | Whatsapp Encryption Explained in Tamil
வாட்சப் Encryption என்பது ஒரு பாதுகாப்பு அம்சம் ஆகும். Whatsapp ஆனது, பயனர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 512 என்கிரிப்ஷன் என்ற பாதுக்காப்பு அம்சத்தை பயன்படுத்தி வருகிறது. அதாவது, பயனர்கள் அனுப்பும் மெசேஜ் ஆனது 512 Encryption மூலம் மற்றவர்களுக்கு படிக்காத வகையில் பாதுக்கப்படும் முறை ஆகும். இதனால் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும். 512 Encryption பயன்படுத்தினால் ஒருவர் யாருக்கும் Msg அனுப்புகிறாரோ அவர் மட்டுமே படிக்க முடியும். அதுவே 512 Encryption இல்லையென்றால் வாட்சப் மூலம் பயனர்கள் அனுப்பும் தகவல்கள் பாதுக்காப்பாக இருக்காது. பலராலும் தகவல்கள் திருடப்படும். எனவே, Whatsapp Encryption என்பது ஒரு பாதுகாப்பு அம்சம் ஆகும்.
இது HMAC-SHA256 ஆல் உருவாக்கப்பட்ட செய்தி விசையைப் பயன்படுத்துகிறது. மேலும் செய்தி விசையானது AES256 ஆல் முதல் மற்றும் இறுதி வரை பாதுகாக்கப்படுகிறது. எனவே அடிப்படையில், வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் செய்தி விசைக்கு SHA256 ஐப் பயன்படுத்துகின்றனர், மேலும் இந்த விசைகள் செய்திகளை மறைகுறியாக்குவதற்கு பொறுப்பாகும். (நீங்கள் மற்றும் நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் மட்டுமே அனுப்பப்பட்டதைப் படிக்கவோ அல்லது கேட்கவோ முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது, மேலும் இதற்கிடையில் உங்கள் தகவல்களை WhatsApp கூட அறிய முடியாது.)
இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த தகவல் தொழில்நுட்ப சட்டத்தை “வாட்சப் மற்றும் பேஸ்புக் மீறுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதனை எதிர்த்து மெட்டா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு ஆனது டெல்லி உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் அவர்கள், வாட்சப் செயலின் பாதுகாப்பு அம்சத்தால் போலி செய்திகளை சிக்கல்/கஷ்டம் உள்ளதாக (மத்திய அரசு) கூறியுள்ளது.
இதற்கு வாட்சப் நிறுவனம் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளது. உலகில் உள்ள எந்த நாட்டிலும் இதுபோன்ற சட்டம் இல்லை என்று கூறியுள்ளது. மேலும், மத்திய அரசின் சட்டங்களால் அனைத்து செய்திகளையும் பல ஆண்டுகள் சேமித்து வைக்க வேண்டிய நிலை உருவாகும் எனவும் தெரிவித்துள்ளது. Whatsapp 512 Encryption பாதுகாப்பு அம்சத்தை இல்லாமல் செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம் என்றும் வாட்சப் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்து தரப்பு விவாதங்களையும் கேட்ட பிறகு, இந்த வழக்கினை ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்கள்.
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Interesting information |