எந்த மட்டன் உடம்புக்கு நல்லது
வாரத்தில் ஒரு நாள் எப்போது லீவு வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருப்போம். ஏனென்றால் அன்றைய நாள் அசைவ உணவுகளை வாங்கி சாப்பிடுவோம். சிலர் வீட்டில் மீன், சிக்கன், மட்டன் என்று அவர்களுக்கு பிடித்ததை வாங்குவார்கள். இது போல நீங்கள் வாங்கும் போது எது உடம்புக்கு நல்லது என்று பார்த்து வாங்குவது அவசியமானது. அதனால் தான் இந்த பதிவில் எந்த கறி உடம்புக்கு நல்லது என்று அறிந்து கொள்வோம் வாங்க..
மட்டன் வகைகள்:
மட்டனில் இரண்டு வகை இருக்கிறது, ஒன்று வெள்ளாட்டு கரி, மற்றொன்று செம்மறி ஆட்டு கரி என்பதாகும்.
வெள்ளாட்டு கரியில் சிவப்பு மற்றும் வெள்ளை கலந்த நிறமாக இருக்கும். அதுவே செம்மறி ஆட்டு கறி என்பது லேசான சிவப்பு நிறமாக காணப்படும். வெள்ளாட்டில் வாலை நறுக்காமல், கடையில் தொங்க விட்டிருப்பார்கள். அதுவே செம்மறி ஆட்டு கறி என்றால் வாலை வெட்டிருப்பார்கள்.
கரியின் உணவு சுவை:
இந்த செம்மறி ஆட்டில் பிரியாணி செய்தால் அருமையாக இருக்கும். வெள்ளாட்டில் குழம்பு, வறுவல் செய்தால் அருமையாக இருக்கும். அது போல செம்மறி ஆட்டு கறி சாப்ட் ஆக இருக்கும். அதுவே வெள்ளாட்டு கறி கொஞ்சம் கடினமாக இருக்கும்.
கொழுப்பு:
இந்த செம்மறி ஆட்டில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகமாக இருக்கிறது. வெள்ளாட்டில் கொழுப்பு குறைவாக இருக்கும். அதனால் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் இந்த செம்மறி ஆட்டு கறி சாப்பிடும் போது உடல் எடையானது இன்னும் அதிகமாக இருக்கும். அதனால் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் செம்மறி ஆட்டு கறியை அதிகமாக எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
அதற்கு பதிலாக வெள்ளாட்டு கறியை எடுத்து கொள்ளலாம். அப்படி ஒரு வேலை உங்களுக்கு செம்மறி ஆட்டு கறி தான் எடுத்து கொள்ள வேண்டுமென்று என்று நினைத்தால் அதிகமாக எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். அளவோடு எடுத்து கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.
அது போல வெறும் கறியை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும், வெள்ளையாக இருப்பதெல்லாம் கொழுப்பு அதனால் இந்த கொழுப்பு பகுதியை எடுத்து கொள்ள கூடாது.
குழந்தைகளுக்கு கொடுக்கும் போது நெஞ்செலும்பு, முதுகெலும்பு இந்த பகுதி எல்லாம் கொடுக்கலாம். ஏனென்றால் இந்த பகுதி எல்லாம் சாப்ட் ஆக இருக்கும். அதனால் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு கொடுக்கும் போது விரும்பி சாப்பிடுவார்கள்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |