Why Shouldn’t You Say Ayyo in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். அதாவது நமக்கு ஏதாவது கஷ்டம் என்றாலோ, அல்லது ஆபத்து என்றாலோ நம்மில் பலரும் சொல்வது ஐயோ என்ற வார்த்தையை தான். இந்த அய்யோ என்ற வார்த்தையை நாம் கூறும் போது நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அய்யோ என்று சொல்லாதே அது வீட்டிற்கு நல்லதல்ல என்று சொல்வார்கள்.
இந்த அனுபவம் நம் அனைவருக்குமே இருக்கும் என்று நினைக்கிறேன். நாமும் அதை சரி என்று கேட்டுக்கொள்வோம். ஆனால் ஏன் அய்யோ என்று சொல்லக்கூடாது என்று நம்மில் பலருக்கும் தெரியாது. அதனால் இந்த பதிவின் வாயிலாக அய்யோ என்று ஏன் சொல்லக்கூடாது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
வீடு அல்லது தொழில் செய்யும் இடத்தில் பேசக்கூடாத வார்த்தைகள் எது தெரியுமா..
அய்யோ என்று ஏன் சொல்ல கூடாது..?
பொதுவாக அய்யோ என்பது பல மொழிகளில் பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும். ஆனால் இது எல்லா மொழிகளிலும் கெட்ட மற்றும் தவறான விஷயங்களின் அடையாளமாக கருதப்படுகிறது. அதனால் பலரும் அய்யோ என்று கூறக்கூடாது என்று சொல்கிறார்கள்.
அதுபோல இந்து புராணங்களின் படி, அய்யோ என்பது பூலோகத்தில் இருக்கும் உயிர்களின் மரணத்தை பறிக்கும் கடவுளான எமதர்ம ராஜாவின் மனைவி பெயர் தான் அது. எனவே, பல பாரம்பரிய தென்னிந்தியக் குடும்பங்களில், எந்தச் சந்தர்ப்பத்திலும் அய்யோ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது சாதகமற்றதாகக் கருதப்படுகிறது.
மேலும் திகில், திகைப்பு, சோகமான தருணங்கள் போன்ற பல்வேறு உணர்ச்சிகளைக் காட்ட அய்யோ என்ற வார்த்தை ஒரு வெளிப்பாடாக இருக்கிறது. அதிலும் எதிர்மறை உணர்வுகளை வெளிப்படுத்த இந்த வார்த்தை பயன்படுத்தப்படுவதால் அது இயற்கையாகவே நமக்கும் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் எதிர்மறை அதிர்வுகளை உருவாக்குகிறது என்று சொல்லப்படுகிறது.
மேலும் இந்த அய்யோ என்ற சொல்லுக்கு ஒரு ஆன்மீக கதையும் இருக்கிறது. அதை பற்றி தற்போது காணலாம்.
மருதாணி போட்டால் ஒரு வாரம் உங்களை எமன் நெருங்க மாட்டாரா
அய்யோ என்று சொல்ல கூடாததன் கதை:
ஒரு நாள் மரம் வெட்டும் வியாபாரி ஒரு மரத்தின் கிளையின் மீது அமர்ந்து கொண்டு, அந்த கிளையை வெட்டி கொண்டு இருந்தார்.
அப்போது அதை மேலோகத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த பார்வதி தேவி, சிவபெருமானிடம், இப்படி மரத்தை வெட்டினால் அவன் தானே கீழே விழுவான் என்று கூறினார்.
அதற்கு சிவபெருமான் ஆமாம். அப்படி அவன் மரத்தை வெட்டி கீழே விழுந்தால், நம் இருவரில் யாரையாவது கூப்பிடுவான். அப்படி உன்னை கூப்பிட்டால் நீ சென்று காப்பாற்று, என்னை கூப்பிட்டால் நான் சென்று காப்பாற்றுகிறேன் என்று கூறினார்.
அதற்கு பார்வதி தேவியும் சரியென ஒப்புக்கொண்டார். இருவரும் அடுத்து என்ன நடக்கும் என்று பார்த்து கொண்டிருந்தனர்.
கொஞ்சம் நேரத்தில் அந்த கிளை முறிந்து விழுந்தது. மரவெட்டியும் “அய்யோ” என்று சொல்லிக்கொண்டே கீழே விழுந்தான்.
பார்வதி தேவி தன்னை அழைக்கவில்லை என்றாலும், அவனை காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால் அவன் கீழே விழுந்த அடுத்த நிமிடமே இறந்து விட்டான்.
பார்வதி தேவி அவனை காப்பாற்ற முடியவில்லையே என்று வருத்தப்பட்டார்.
அதற்கு சிவபெருமான், அவன் அழைத்தது எமனின் மனைவி அய்யோவை அல்லவா..? அதனால் தான் அய்யோ வந்து அவன் உயிரை எடுத்து சென்று விட்டார் என்று கூறினார்.
இதன் காரணமாக தான் அய்யோ என்று சொல்ல கூடாது என்று பெரியவர்கள் கூறினார்கள்.
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Interesting information |