வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

“ஓம் நமசிவாய” என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா..?

Updated On: April 23, 2024 11:20 AM
Follow Us:
Om Namah Shivaya Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Om Namah Shivaya Meaning in Tamil

பொதுநலம் பதிவின் ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் ஓம் நமசிவாய என்பதற்கு அர்த்தம் என்ன என்பதை பற்றி தான் பார்க்கக் போகின்றோம். பொதுவாக நம் அனைவருக்குமே ஏதாவது ஒரு கடவுளின் மீது அதீத பற்று இருக்கும். அப்படி அனைத்து கடவுள்களுக்கும் முதன்மை கடவுளாகவும், மும்மூர்த்திகளில் ஒருவராகவும் இருப்பவர் தான் சிவபெருமான். இந்து சமயத்தில் சிவபெருமானை வணங்காதவர் என்று யாருமே இருக்க முடியாது.

அப்படி சிவபெருமானின் பக்தர்களாக இருப்பவர்கள் அவரை வணங்கும் போது ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை கூறி வழிபடுவார்கள். இந்த மந்திரத்தை நாமும் கூறியிருப்போம். சரி அப்படி கூறும் போது ஓம் நமசிவாய என்பதற்கு உண்மையான அர்த்தம்  என்ன என்பதை பற்றி என்றாவது யோசித்திருக்கிறீர்களா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். சரி வாங்க நண்பர்களே அதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம்.

ஓம் நம சிவாய மந்திரம் மற்றும் சிவனின் 108 போற்றி..

“ஓம் நமசிவாய” என்பதன் அர்த்தம் என்ன..? 

ஓம் நமசிவாய என்பதன் அர்த்தம் என்ன

பொதுவாக நமசிவாய என்பது சிவபெருமானுக்குரிய ஐந்து எழுத்துக்களைக் கொண்ட பஞ்சாட்சர மந்திரம் ஆகும். இது சைவ சமயத்தின் மூல மந்திரம் என்று சொல்லப்படுகிறது.

சிவபெருமானின் திருவருளைப் பெறுவதற்கு உற்ற துணையாக இருப்பவை திருநீறு, உருத்திராக்கம், திருவைந்தெழுத்து எனப்படும் மூன்று சாதனங்கள் ஆகும்.

இவைகளில் திருநீறும் உருத்திராக்கமும் (ருத்ராட்சம்) புறச்சாதனங்களாகக் கருதப்படுகின்றன. திருவைந்தெழுத்து எனப்படும் நமசிவாய மந்திரம் அகச்சாதனம் ஆகும்.

அதாவது திருவைந்தெழுத்து என்பது பஞ்சாட்சரம் எனவும் பஞ்சாட்சர மந்திரம் எனவும் அழைக்கப்படுகிறது.

சிவன் மந்திரம் தமிழ்

சரி நாம் எந்த மந்திரத்தை உச்சரித்தாலும், ஓம் என்று சொல்வது வழக்கம். பஞ்சாசரத்தில் முதலாக வருகின்ற ஓம் உலகின் மூல ஒலியான பிரணவத்தை காட்டுகிறது. அதுபோல நமசிவாய என்பது,

சி – என்பது சிவபெருமானையும்,

வா – என்பது அம்பாளையும்,

ய – என்பது மனிதர்களான ஜீவன்களையும்,

நம – என்பது ஜீவன்களை பற்றியுள்ள மாயை, ஆணவம், கர்மம் என்ற மும்மலத்தையும் காட்டுகிறது.

இப்படி மனிதர்களை சூழ்ந்துள்ள கெட்ட எண்ணங்களில் இருந்து விடுபட அம்மையப்பனின் பாதங்களை பற்றி கொள்கிறேன் என்று பொருள் தருகிறது. 

அதுபோல, நம என்பது வணங்குகிறேன் என்று பொருள் தருகிறது.

நமசிவாய என்பது சிவபெருமானை வணங்குகிறேன் என்று பொருளை தருகிறது. ஆகவே ஓம் நமசிவாய என்பது சிவனை வணங்குகிறேன் என்றும் பொருள் தருகிறது. 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now