திரிபலா சூரணம் பொடியில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் | Thiripala Chooranam Ingredients in Tamil

Advertisement

Thiripala Chooranam Ingredients in Tamil

நாம் அனைவருமே திரிபலா சூரணம் என்பதை கேள்வி பட்டிருப்போம். பெரும்பாலனவர்கள் திரிபலா சூரணத்தை பல்வேறு முறைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். சித்தமருத்துவ மருந்துகளில் திரிபலா சூரணம் முதன்மையாக திகழ்கிறது. உடலின் மனித உடலின் பித்தம், கபம், வாதம் போன்றவை சமன்படுத்தப்படுத்துகிறது.

திரிபலா சூரணத்தை பல்வேறு நன்மைகள் கொட்டிக்கிடைக்கிறது. அதனால் தான் சித்தமருத்துவ பொருட்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அவ்வளவு நன்மைகள் அளிக்கக்கூடிய திரிபலா சூரணத்தில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பது தெரியுமா.? தெரியவில்லை என்றால் இப்பதிவினை படித்து திரிபலா சூரணத்தில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் என்னெவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

திரிபலா சூரணம் பொடியில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள்:

 thiripala podi ingredients in tamil

திரிபலா சூரணம் மூன்று மூலிகை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. அஃதாவது,  மூலிகைகளான கடுக்காய், தான்றிக்காய் மற்றும் நெல்லிக்காய் போன்ற பொருட்கள் தான் திரிபலா சூரணம் பொடியில் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, இயற்கையான உலர்ந்த கடுக்காய், தான்றிக்காய் மற்றும் நெல்லிக்காய் பொருட்களை சம அளவு எடுத்து பொடியாக்கிய பின் கிடைக்கும் மாவுப்பொருளே திரிபலா சூரணம் எனப்படும்.

திருமஞ்சனம் பொடி செய்ய தேவையான பொருட்கள்

Thiripala Chooranam Ingredients in English:

  • Amla
  • Haritaki
  • Vibhitaki

கடுக்காய்:

மூலிகை பொருளான கடுக்காய் ஆனது, ஐந்து சுவைகளை உள்ளடக்கியது ஆகும். அதாவது, அறுசுவைகளில் உப்பை தவிர மற்ற ஐந்து சுவையும் கடுக்காயில் உள்ளது. கடுக்காய் விதை விஷம் என்பதால் அதனை நீக்கிவிட்டு தான் கடுக்காய் பொடி செய்யபடுகிறது.

தான்றிக்காய்:

தான்றிக்காய் 120 அடி வரைகூட வளரக்கூடியது ஆகும். இது, நுரையீரல் நோய்களுக்கு சிகிச்சையளிக்க சித்தமருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நெல்லிக்காய்:

நெல்லிக்காயின் நன்மைகள் பற்றி நாம் அனைவருக்குமே தெரியும். இதில், உடலுக்கு தேவையான வைட்டமின் சி உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. என்றும் இளமையுடன் இருக்க நெல்லிக்காய் பெரிதும் உதவுகிறது.

திரிபலா சூரணம் எப்படி சாப்பிட வேண்டும்.?

சித்த மருத்துவத்தில் திரிபலா சூரணம் பொடியை வெறுக்கடி அளவு எடுத்து, தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரட்டிப்பு பலன்களை பெறலாம்.

  • மழைக்காலங்களில் திரிபலா பொடியை சூடான தண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
  • குளிர் காலங்களில் திரிபலா பொடியை நெய்யுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
  • கோடைகாலத்தில் திரிபலா பொடியை நீருடன் கலந்து சாப்பிட வேண்டும்.
  • பனிக்காலங்களில் திரிபலா பொடியை தேனுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

1 லிட்டர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்ய எத்தனை தேங்காய் தேவைப்படும்.?

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement
Advertisement