திருமஞ்சனம் பொடி
ஒவ்வொரு கடவுள்களுக்கும் ஒவ்வொரு மாதிரியான அபிஷேகம் செய்வார்கள். இந்த அபிஷேகமும் ஒவ்வொன்று நடக்கும், பால் அபிஷேகம், பேரீட்சைப்பழம் அபிஷேகம், இளநீர் அபிஷேகம் போன்றவை நடக்கும். திரவிய பொடி போன்றவை பயன்படுத்தியும் அபிஷேகம் செய்வார்கள். இந்த பொடிகள் அனைத்தும் கடையில் வாங்கி தான் கடவுளுக்கு அபிஷேகம் செய்வார்கள். இதனை வீட்டிலேயே தயாரிப்பது சுலபமான ஒன்றாக இருக்கிறது. இன்றைய பதிவில் திருமஞ்சன பொடி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் தயாரிப்பு பற்றி அறிந்து கொள்வோம்.
திருமஞ்சனம் பொடி என்றால் என்ன.?
திருமஞ்சனம் வைண சமயக் கோயில்களில் சிறப்பு நாட்களில் மூலவரான திருமாலின் திருமேனிக்கு திருநீராட்டு செய்வதற்கு திருமஞ்சனம் என்பர். சைவ சமயக் கோயில்களில் சிவ லிங்கத்திற்கு திருநீராட்டு செய்வதற்கு அபிஷேகம் செய்வார்கள். திருமஞ்சனம் என்னும் சொல்லிற்கு மூலவரான திருமாலின் திருமேனிக்கு நறுமண எண்ணெய் பூசுவதாகும். மெய்யஞ்சனம் என்றால் உடம்புக்கு எண்ணெய் பூசுவது. திரு மெய் அஞ்சனம் எனில் திருமாலின் திருமேனிக்கு எண்ணெய் பூசுவது. திரு மெய் அஞ்சனம் என்ற சொல் மருவி திருமஞ்சனம் என்றாகிற்று.
திருநெல்வேலி இருட்டு கடை அல்வாவில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள்
How to Make Thirumanjana Podi at Home:
- ஏலக்காய்
- பச்சை கற்பூரம்
- கிராம்பு
- கஸ்தூரி மஞ்சள் தூள்
- சந்தன பவுடர்
- ஜவ்வாது
திருமஞ்சன பொடி தயாரிப்பு:
மேல் கூறப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் உங்களுக்கு தேவையான அளவு எடுத்து மிக்ஸ் ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். பின்பு இதனை ஒரு மூடி போட்ட டப்பாவில் சேர்த்து ஸ்டோர் செய்து கொள்ள வேண்டும். இதனை பயன்படுத்தி கடவுளுக்கு அபிஷேகம் செய்யலாம்.
திருப்பதி லட்டில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள்
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |