How Many Coconuts to Make 1 Litre Coconut oil
அனைவரது வீட்டிலும் அன்றாடம் பயன்படும் முக்கிய பொருட்களில் தேங்காய் எண்ணெய்யும் ஒன்று. தேங்காய் எண்ணெய் தலைமுடிக்கு மட்டுமில்லாமல் சமையல் உள்ளிட்ட பலவகைகளில் பயன்படுகிறது. தேங்காய் எண்ணெய்யை சிலர் கடைகளில் வாங்கி வந்து பயன்படுத்துவார்கள், இன்னும் சிலர் வீடுகளில் தேங்காயை உடைத்து காயவைத்து அதனை செக்கில் ஆட்டி தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்து பயன்படுத்துவார்கள்.
பொதுவாக, எண்ணெய் என்றாலே பெரும்பாலும் கடைகளில் வாங்குவதை விட செக்கில் ஆட்டிய எண்ணெய் தான் அதிகம் விரும்புவார்கள். எனவே, செக்கில் 1 லிட்டர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்ய எவ்வளவு தேங்காய் தேவைப்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
1 லிட்டர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்ய தேவையான தேங்காய் அளவு:
1 லிட்டர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்ய 20 முதல் 22 தேங்காய் வரை தேவைப்படும். அதாவது, பெரிய முற்றிய 10 தேங்காய் குறைந்தது 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் தரும். அதுவே, பெரிய முற்றிய 20 தேங்காய் மூலம் குறைந்தது 1 லிட்டர் வரை தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும். ஆகையால், 1 லிட்டர் தேங்காய் எண்ணெய் பெற 20 தேங்காய் தேவைப்படும்.
அதுவே, கிலோ கணக்கில் என்று எடுத்துக்கொண்டால் 1 கிலோ தேங்காய் மூலம் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் பெறலாம். எனவே, நமக்கு 1 லிட்டர் தேங்காய் எண்ணெய் வேண்டுமென்றால், அதற்கு 2 கிலோ தேங்காய் தேவைப்படும்.
இன்றைய தேங்காய் விலை நிலவரம் 2024
தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் முறை:
- முதலில் நன்கு முற்றிய தேங்காயை பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
- அதன் பிறகு, தேங்காயை உரித்து இரண்டாக உடைத்து வெயிலில் நன்கு காயவைக்க வேண்டும்.
- காய்ந்ததும், அதனை தேங்காய் மட்டையில் இருந்து எடுத்து கொள்ளவேண்டும். அதன் பிறகு, தேங்காயை சிறிது சிறிதாக நறுக்கி காயவைக்க வேண்டும்.
- தேங்காய் பருப்பை உடைத்தால் நன்கு எண்ணெய் வரும் அளவிற்கு காயவைத்து எடுத்து கொள்ளவேண்டும். அடுத்து, இறுதியாக செக்கில் கொடுத்து எண்ணெய்யாக ஆட்டி எடுத்து கொள்ளுங்கள்.
- செக்கில் ஆட்டி எண்ணெய் வாங்கி வந்ததும், அதனை ஒரு நாள் முழுவதும் வெயிலில் காயவைத்து பாத்திரத்தில் ஊற்றி நன்கு மூடி வைத்து பயன்படுத்த வேண்டும்.
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |