தையல் தேவையான பொருட்கள் | Tailoring Things Name in Tamil | Sewing Materials List
கலைகளில் சிறந்த கலை தையல் கலை ஆகும். நமக்கு தெரிந்து பல கலைகள் இருக்கும். ஆனால், அவை எல்லாம் காலப்போக்கில் குறைந்துகொண்டே வரும் அல்லது அழிந்துபோகும். ஆனால், தையல் கலை மட்டும் எப்போதும் அழியாத ஒன்று. அக்காலம், இக்காலம், எதிர்காலம் என எல்லா காலங்களிலும் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்துகொண்டே இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், தையல் கலையில் பல்வேறு அம்சங்கள் நிறைந்த கலைகளும் சேர்க்கப்பட்டு வருகிறது.
தையல் கலை என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் என்றும் கைக்கொடுக்கும் தொழில் ஆகும். இதனால் பெண்கள் மற்றும் ஆண்கள் என இருவருமே தையல் கலை கற்றுக்கொள்வதில் அதிகம் ஆர்வம் உடையவர்களாக இருக்கிறார்கள். ஆகையால், முதன் முதலில் தையல் பயிற்சி செய்து கொண்டிப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தையலுக்கு தேவையான பொருட்களை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
Basic Sewing Tools with Names in Tamil:
- நூல்
- கத்தரிக்கோல்
- அங்குல நாடா (inc tape)
- ஸ்கேல்
- வண்ணக்கட்டி
- பென்சில்
- இரப்பர்
- ஊசி
- பாபின்கேஸ்
- பட்டன் பாக்ஸ்
- லூஸ் பெட்டி
- துணி
- சிறிய கட்டர்
- பட்டன்
- கொக்கி
ஊசி:
தையலில் மிகவும் முக்கியமான பொருள் ஊசி. ஊசிகளில் இரண்டு வகையான ஊசிகளை வாங்க வேண்டும். அதாவது, கைத்தையல் போடுவதற்கு கைத்தையல் ஊசியும், மெஷினில் போடுவதற்கு மெஷின் ஊசியும் வாங்க வேண்டும். இதில் கைத்தையல் ஊசியானது, துணி தைத்து முடித்ததும் அதில் காஜா எடுத்து பட்டன் மற்றும் கொக்கி தைக்க பயன்படுகிறது.
நூல்:
தையல் தைப்பதற்கு முதலில் அவசியமான பொருள் நூல். அதனால், 10 அல்லது 12 வண்ணங்களில் நூல்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள்.
ஸ்கேல்:
1 அடி ஸ்கேல் வாங்கி கொள்ளவும். இது, வரி வடிவம் வரைவதற்கு துணியிலும் மற்றும் காகிதத்திலும் வரைவதற்கு பயன்படுகிறது.
அங்குல நாடா (Inc Tape):
துணிகளை அளப்பதற்கு டேப் மிகவும் அவசியக். ஆகையால், டேப் 150 செண்டிமீட்டராகவும் , அங்குல எண்கள் ’53 ‘ ஆகவும் பொறிக்கப்பட்டிற்கும் Tape வாங்க வேண்டும்.
பென்சில்:
காகிதத்தில் மற்றும் துணிகளில் மேலோட்டமாக வரிவடிவங்கள் வரைவதற்கு பென்சில் பயன்படுகிறது.
பாபின்கேஸ்:
பாபினில் சுற்றப்பட்டுள்ள நூலானது பாபின்கேஸ் தூவரத்தின் வழியாக வெளிவருகிற தையல் இயந்திரத்தின் கீழ் புறத்தில் இருந்து வரும் நூல் பாகமாகும்.
தையல் மெஷினை இப்படி சுத்தம் செய்யுங்கள்.. மெஷின் நீண்ட நாட்களுக்கு பழுதடையாமல் இருக்கும்..
வண்ணக்கட்டி:
வண்ணக்கட்டிகள், துணிகளை அளந்து குறித்து வைத்துக்கொள்ள பயன்படுகிறது.
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |